டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்தியேந்திரா ஜெயின் ஆகியோர் மீது பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில், அவர் கடந்த வாரம் அவர் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தென் மாநிலங்களில் தனக்கு முக்கிய பதவி தருவதாகவும், மாநிலங்களவை தேர்தலில் சீட் பெறுவதற்கும் அக்கட்சிக்கு ரூ.50 கோடி வழங்கியதாகவும் சுகேஷ் சந்திரசேகர் புகார் தெரிவித்தார். அதேபோல், சிறையில் தனக்கு வசதிகளை தருவதற்கு ரூ.1.5 கோடி லஞ்சம் பெற்றனர் என டெல்லி அரசு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் மீது புகார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி ரூ.10 கோடி தொகையை ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியேந்தர் ஜெயின் பெற்றதாகவும் பகிரங்க புகார் லெட்டரை அளித்துள்ளார். இந்த புகார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், தனது கட்சி மீது மோசமான பிம்பத்தை உருவாக்க பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டு என ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, ஆம் ஆத்மி மீதான இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரச்னையை முன்னெடுத்து வருகின்றன. தான் சொல்வது பொய் என்றால் நீங்கள் என்னை தூக்கிலிடலாம் என்றார் சுகேஷ்.
இதையும் படிங்க: லேப்டாப் வைத்திருந்ததால் ரூ.10 கூடுதல் கட்டணம்.. அரசு பேருந்தில் அதிர்ச்சி.!
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜோய்குமார் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், ஒரு முதலமைச்சர் மீது இவ்வாறு புகார் எழுவது இதுவே முதல்முறை. சுகேஷ் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெளிவாக தெரிவித்துள்ளார். எனவே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மற்றும் புகார் அளித்த சுகேஷ் சந்திரசேகர் ஆகிய மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Delhi