ஆணுறை இல்லையென்றால் அபராதம் விதிக்கும் போலீசார் - கால் டாக்சி டிரைவர்கள் வேதனை

news18
Updated: September 22, 2019, 2:25 PM IST
ஆணுறை இல்லையென்றால் அபராதம் விதிக்கும் போலீசார் - கால் டாக்சி டிரைவர்கள் வேதனை
மாதிரிப் படம்
news18
Updated: September 22, 2019, 2:25 PM IST
டெல்லியில் கால் டாக்சிகளில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் போலீசார் அபராதம் விதிப்பதாக டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதை நெறிப்படுத்த போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, உரிய ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி டெல்லியில் கால் டாக்சிகளில் சோதனை செய்யும் போலீசார் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை இல்லையென்றால் அதற்கு அபராதம் விதித்து வருகின்றனர்.


ஆனால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை என்றாலும் கால்டாக்‌ஷியில் ஆணுறை இருப்பது அவசியமானது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்ததால் அதை வைத்து அபராதம் விதிப்பதாக டிரைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் கார்களில் ஆணுறை வைத்திருப்பதால் மழைக்காலத்தில் காரின் குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டாலோ, விபத்துகளில் யாருக்கேனும் அடிபட்டு ரத்தம் கசிந்தாலோ அதனை தடுத்து நிறுத்த ஆணுறை பயன்படுத்தப்படுகிறது. மழைக்காலங்கலீல் ஷூக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது. பாதுகாப்பான உடலுறவுக்கு மட்டுமல்ல. இதுபோன்ற பிரச்னைகளிலும் ஆணுறை உதவுவதாகவும் டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.வீடியோ பார்க்க: மறுமணம் செய்த பெண் மீது கொலைவெறித்தாக்குதல் நடந்த நிலையில் அடுத்த கொலை

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...