Home /News /national /

ஜாமினில் வெளிவந்த சாமியார் மீண்டும் சர்ச்சை பேச்சு.. போலீஸ் வழக்குப்பதிவு

ஜாமினில் வெளிவந்த சாமியார் மீண்டும் சர்ச்சை பேச்சு.. போலீஸ் வழக்குப்பதிவு

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது

  • News18
  • Last Updated :
Hindu Mahapanchayat: ஹரித்வாரா வெறுப்பு பேச்சு வழக்கில் கைது செய்யப்ப்பட்டு, பிணையில் வெளிவந்த  இந்து சாமியார் யதி நரசிங்கானந்த் மீண்டும் வெறுப்பு பேச்சால் சர்ச்சையாகியுள்ளது.

இந்தியாவில் மத ரீதியான வெறுப்பு பேச்சு சம்பவங்கள் புதியது இல்லையென்றாலும் கூட, அண்மைக் காலங்களில்  இத்தகைய சம்பவங்கள் மிகத் தீவிரத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது. இனவாத- மத வன்முறைகளை இயக்குவதில்  வெறுப்புப் பேச்சு முக்கியபங்கு வகிக்கிறது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம்  உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தரம் சன்சத் என்ற இந்துமத மாநாடு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய இந்துத்துவ தலைவர்கள் கற்பனை செய்ய முடியாத வகையில் வெறுப்பு கருத்துக்களை பதிவு செய்தனர். இஸ்லாமியார்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் எதிரான தீவிர விஷம கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சாமியார் யதி நரசிங்கானந்த், மிகவும்  பாரபட்சமான, சர்ச்சைக்குரிய  வகையில் பேசினார். மாநாட்டில் அவர் , "இஸ்லாமியர் ஒருவர் நாட்டின் பிரதமரானால் என்னவாகும்?  வெறும் 20 ஆண்டுகளில்,  50% இந்துக்கள் மதம் மாற்றப்படுவார்கள். 40% இந்துக்கள் கொலை செய்யப்படுவார்கள். இதர 10% இந்துக்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிட்டு, அகதிகளாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். இதுதான் தற்போதை மற்றும் எதிர்கால சவால்கள். இதை, மாற்ற விரும்பினால், ஆண்மையுள்ளவனாக   மாறுங்கள். கையில் ஆயுதம் வைத்திருப்பவனே ஆண்மையுள்ளவன். ஆயுதத்தின் மீது நீங்கள் கொண்ட பற்றுக்கு இணையான அன்பை மனைவி உங்கள் மீதும், மாங்கல்யத்தின் மீதும்  கொண்டிருப்பாள்" என்று தெரிவித்தார்.

இந்த ஹரித்வார் மாநாடு மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பல்வேறு, அரசியல் தலைவர்களும், மத நல்லிணக்க ஆர்வலர்களும் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, யதி நரசிங்கானந்த் கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி மாதம் நிபந்தனையுடன்  கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்து மகமாநாடு:  

இந்நிலையில், 'Save India Foundation' என்ற அமைப்பின் சார்பில் நேற்று 'இந்து மகாமாநாடு' நடைபெற்றது. அதன் தலைவர் ப்ரீத்தி சிங் மாநாட்டை ஒருங்கிணைத்தார்.     இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நரசிங்கானந்த் மற்றும் தீவிர இந்துத்துவா  ஆதரவாளர்கள் ,"இந்து பெரும்பான்மை அதிகாரத்தை நிலைநிறுத்த இஸ்லாமியர்களுக்கு எதிராக  ஆயுதமேந்த வேண்டும்" போன்ற கருத்துக்களை வெளிப்படையாக பேசியுள்ளனர்.பரீத் சிங் கடந்தாண்டு ஜந்தர் மந்தரில் இதே போன்ற ஒரு கூட்டத்தை நடத்தினார். இதில், இஸ்லாமிய மக்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவது, மனிதப் படுகொலை செய்வது போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன. இதுதொடர்பாக, டெல்லி காவல்துறை இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர், நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பிணை நிபந்தனைகளை மீறும் வகையில், நேற்று வடக்கு டெல்லியில் உள்ள பெராரி மைதனாத்தில் காவல்துறையின் அனுமதி பெறாமல் இந்து மகாமாநாட்டை நடத்தியுள்ளார்.

இந்த மாநாட்டின் கலந்து கொண்டு பேசிய யதி நரசிங்கானந்த் ஹரித்வாரில் பேசிய அதே கருத்துகளை தெரிவித்தார். மேலும், கூடுதலாக காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை சுட்டிக் காட்டி தனது விசம கருத்துக்களைத் தெரிவித்தார்.

மாநாட்டின் கலந்து கொண்ட சுதர்ஷன் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே " எங்களின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு  என்ன பதில் வைத்துள்ளோம்? நமது முன்னோர்கள் கோழைகள் என்று உணர்வைத் தான் நமது அடுத்த தலைமுறை  பெறும். இஸ்லாமியமயமாக்கலை அவர்கள் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. 'அனைவருக்கும் சம உரிமை' என்பதை தவறுதலாக புரிந்து கொண்டு பேசி வருகின்றனர். பெரும்பான்மை சமுதாயமாக உள்ள இந்துக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனர். இதை பலவீனமாக கருதினால் நாங்கள் எங்கள் பொறுப்பைத் துறக்க தயாராக இருக்கிறோம்" என்று பேசினார்.

இந்நிலையில், நேற்று கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், மாநாட்டில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றொரு  வழக்கையும் டெல்லி காவல்துறை பதிவு செய்துள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Delhi, Making communal riots

அடுத்த செய்தி