டெல்லியில் ஒரு லட்சம் பேரின் பசியாற்றும் டெல்லி குருத்வாரா

டெல்லியில் ஒரு லட்சம் பேரின் பசியாற்றும் டெல்லி குருத்வாரா
டெல்லியில் பங்களா சாஹிப். (Image: Uday Singh Rana)
  • Share this:
நாடே கொரோனாவோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், டெல்லியில் உள்ள குருத்வாரா தினமும் பசியால் வாடும் ஒரு லட்சம் பேருக்கு உணவு அளித்துக் கொண்டிருக்கிறது.

தலைநகர் டெல்லியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பசியோடு காத்திருக்கும் ஏழைகளுக்காகத் தான். சுமார் 50 பேர் இப்படி 3 வேளையும் உணவு தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியில் உள்ள பங்க்ளா சாகிப் குருத்வாராவில்தான் தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாராகிறது. இந்த பிரமாண்ட சமையலறை மூலம் இலவசமாக பசியாற்றி வந்த குருத்வாரா, கொரோனா ஊரடங்கால் வழிபாட்டிற்காக மூடப்பட்டது.


ஆனாலும், ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்காக சமையலறையை திறந்தே வைத்திருக்கிறது.

தினமும் 1,600 கிலோ உணவுப் பொருட்கள் சமைக்கிறோம். 12 குவிண்டால் அரிசி, 8 குவிண்டால் பயறு. குருவின் அருளால் சமைக்க தேவையான பொருட்கள் நிரம்பியுள்ளன. எந்த பிரச்னையும் இல்லை. அதனால் சாப்பிடும் மக்களுக்கு அதை வழங்குபவர்களுக்கும் எந்த கவலையும் இல்லை.

கையேந்துபவர்கள் ஒருபுறமும், கை கொடுப்பவர்கள் மற்றொருபுறமும் இருக்க, பசிப்பிணி போக்கி வருகிறது இந்த குருத்வாரா. உணவு தயாரானதும் டெல்லி அரசே வாகனங்களை அனுப்பி வைக்கிறது.அதில் ஏற்றப்படும் உணவுகள் அரசின் முகாம்களில் மட்டுமின்றி தெருவோரம் வசிக்கும் ஏழைகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. தன்னார்வலர்களும் உணவுப் பெற்று விநியோகித்தாலும் எதற்கும் பணம் வசூலிப்பதில்லை இந்த குருத்வாரா.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading