ஹோம் /நியூஸ் /இந்தியா /

தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் : பிரதமர் மோடி

தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் : பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவி வருவதாக பிரதமர் மோடி சாடல்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  டெல்லியில், 3-வது தீவிரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 450 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, தீவிரவாதம் இந்தியாவை பலமுறை காயப்படுத்திய போதும், அதை தைரியமாக எதிர்த்ததாக கூறினார்.

  சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உதவுவதாக சாடிய அவர், அந்த நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்றார். தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் என கூறிய பிரதமர், அதற்கு தொடர்ந்து தீவிரமாக செயலாற்றும் திட்டம் அவசியம் என்றார்.

  இதையும் படிங்க: வலியில் அவதிப்பட்ட ஐயப்ப பக்தர்.. காலுக்கு மசாஜ் செய்த கேரள அமைச்சர்

  தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியை முழுமையாக தடுத்து, அதற்காக செயல்படும் குழுக்களை அழிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Delhi, PM Modi