• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லியில் இனி மொபைல் ஆப், ஆன்லைன் வழியாக வீடுகளுக்கே மது டெலிவரி.!

டெல்லியில் இனி மொபைல் ஆப், ஆன்லைன் வழியாக வீடுகளுக்கே மது டெலிவரி.!

ஆப், ஆன்லைன் வழியாக வீட்டுக்கு மது டெலிவரி

ஆப், ஆன்லைன் வழியாக வீட்டுக்கு மது டெலிவரி

இதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போகிறது டெல்லி அரசு.

  • Share this:
பொது முடக்கம் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் மதுபிரியர்களின் வசதிக்காக இனி மொபைல் ஆப் மற்றும் ஆன்லைன் வழியாக ஆர்டர் கொடுத்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்வதற்கு டெல்லி அரசு வழிவகை செய்துள்ளது. டெல்லி அரசின் இந்த புதிய முடிவால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும் மீண்டும் ஒரு முறை ஊரடங்கிற்குள் சென்றுள்ளன. இதன் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. வீடுகளிலேயே பொதுமக்கள் முடங்கிக் கிடக்கின்றன.

ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன, மது விற்பனை முடங்கியுள்ளதால் மதுப்பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். இந்ந்நிலையில் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்போகிறது டெல்லி அரசு. இதன் பின்னர் ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் வழியாக மது விற்பனை செய்தால் வீட்டுக்கே மது வகைகள் டெலிவரி செய்யப்படும்.

இருப்பினும் அனைத்து கடைகளும் மது விற்பனையை ஆன்லைன் வழியாக மேற்கொள்ளும் என அர்த்தம் கிடையாது. L-14 உரிமம் வைத்துள்ள கடைகள் மட்டுமே ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படும்.

முந்தைய விதிகளின்படி இ-மெயில் அல்லது ஃபேக்ஸ் மூலம் ஆர்டர் அளிக்கப்பட்டால் மட்டுமே L-13 உரிமம் வைத்துள்ள கடைகள் மது விற்பனையை டோர் டெலிவரி செய்யலாம் என விதி உள்ளது. இனி மொபைல் ஆப் மற்றும் ஆன்லைன் வழியாகவும் டோர் டெலிவரி செய்வதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

Read More:   பாலியல் குற்றச்சாட்டுகளை திசைத்திருப்புவது நானா? - பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ!

கடந்த ஆண்டு கூட லாக் டவுனில் சில மாநிலங்கள் ஆன்லைன் மது விற்பனையை  தொடங்கின..

கடந்த மாதம் சட்டீஸ்கர் அரசு ஆன்லைன் மது விற்பனையை தொடங்கிய நிலையில் தற்போது டெல்லியும் அதே முறையை பின்பற்றியிருக்கிறது.

Read More:   திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த வார்டு பாய்!

டெல்லியில் கடந்த ஆண்டு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் மது வாங்க நீண்ட நெடிய மக்கள் கூட்டம் வரிசையில் காத்துக்கிடந்தது. கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டதால் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ளலாம் என அப்போது உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: