தலைநகர் டெல்லியில் மிக மிக மோசமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு!

தலைநகர் டெல்லியில் மிக மிக மோசமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு!
News18 Creative by Mir Suhail.
  • News18
  • Last Updated: October 28, 2019, 10:00 AM IST
  • Share this:
காற்று மாசுபாட்டால் ஏற்கனவே சிக்கித்தவிக்கும் தலைநகர் டெல்லி, தீபாவளி பட்டாசு காரணமாக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள குருகிராம், நொய்டா, காஸியாபாத் ஆகிய புறநகர் பகுதிகள் ஏற்கனவே கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. மோட்டார் வாகனங்களால் எழும் புகைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் கோதுமை அடித்தாள் எரிக்கப்படுவது உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு அடிக்கடி மோசமான நிலையை எட்டும்.

இதற்காக சில நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டாலும், அவ்வப்போது காற்று மாசுபாடு அபாய நிலைக்கு செல்கிறது. இந்நிலையில், தீபாவளி பண்டியையை ஒட்டி இரண்டு நாட்களாக பட்டாசு கொளுத்தப்பட்டதால் மீண்டும் காற்று மாசுபாடு உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளது.


காற்று மாசுபாடு 400 என்ற அளவை எட்டுவது மிக மோசமான நிலையை குறிக்கும் என்ற நிலையில், காலை 7 மணிக்கு காற்று மாசுபாடு 506 என்ற அளவை எட்டியது. இதுவே, காலை 4 மணிக்கு 999 ஆக இருந்தது.

500-க்கு மேல் என்பது அபாய நிலையை குறிப்பதாகும். கடந்தாண்டு தீபாவளியின் போது டெல்லியில் காற்று மாசுபாடு 12 முறை அபாய நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது.

காற்றின் மாசு அதிகரித்ததால் டெல்லியில் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இதுவே, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் காற்று மாசுபாடு கட்டுக்குள் இருந்துள்ளது.

First published: October 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading