ஹோம் /நியூஸ் /இந்தியா /

தீபாவளி நாளில் மிக மோசமான நிலைக்கு சென்ற டெல்லி காற்று மாசு அளவு

தீபாவளி நாளில் மிக மோசமான நிலைக்கு சென்ற டெல்லி காற்று மாசு அளவு

டெல்லி காற்றுமாசு

டெல்லி காற்றுமாசு

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது காற்று மாசு குறியீட்டு அளவில் தெரியவந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  கடந்த சில ஆண்டுகளாகவே அக்டோபர் மாதம் தொடங்கி டெல்லியில் காற்று மாசு பிரச்சனை தீவிரமாக காணப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி தொடங்கி இந்த பிரச்னை டிசம்பர், ஜனவரி பிப்ரவரி என குளிர்காலம் முடிவும் வரை தீவிர சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

  பொதுவாக குளிர் காலங்களில் டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் முடிந்த போகத்தின் விவசாய குப்பைகளை எரித்துவிட்டு அடுத்த விதைத்தலுக்கு நிலத்தை ஏற்பாடு செய்வர். இந்த விவசாய கழிவு எரிப்புடன் வாகனப்புகை, தொழில்சாலை புகைகளும் சேர்ந்து கொண்டு கற்றின் தரத்தை மிக மோசமாக சீரழித்து வருகின்றன. தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வெடிப்புகை மூலம் காற்று மாசு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.

  இந்நிலையில் இன்று காலை டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிக மோசமான நிலையை தொட்டுள்ளது. டெல்லி பல்கலைகழக பகுதிகளில் காற்று தரக் குறியீடு 319 புள்ளியை தொட்டுள்ளது. அரசு காற்றுதர குறியீட்டை(AQI) 6 வகைகளாக தரம் பிரித்துள்ளது.

  அதன்படி, 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 - 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 - 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானதாகும். தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டியுள்ளதால் இவற்றை கட்டுப்படுத்த அரசு தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளது.

  இதையும் படிங்க: ராமரின் சக்தி இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது - அயோத்தி தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி உரை

  டெல்லியில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசுகளை வெடிக்கவோ, உற்பத்தி செய்யவோ, விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டெல்லியில் பட்டாசுகளை வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். பட்டாசுகளை தயாரித்து விற்றால் ரூ.5,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை அமல்படுத்தி கண்காணிக்க 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Air pollution, Deepavali, Delhi