ஹோம் /நியூஸ் /இந்தியா /

விவசாயிகள் வைக்கோலுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

விவசாயிகள் வைக்கோலுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வைக்கோலை தீ வைக்காமல் அகற்ற விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு 100 ரூபாய் வழங்க பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில் அது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது பஞ்சாப். டெல்லி மற்றும் அரியானா மாநில தலைமைச் செயலாளர்களும் வந்திருந்தனர்.

எப்போதும் போல் இந்த ஆண்டும் விவசாயிகள் வைக்கோலை எரிப்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று எனக் கூறிய நீதிபதி மிஸ்ரா, வைக்கோல் எரிப்பைக் கட்டுப்படுத்துவதில் பஞ்சாப் மாநில அரசும் அண்டை மாநிலங்களும் தத்தம் கடமையில் இருந்து தவறிவிட்டன என நீதிபதி சாடினார். இவ்விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கும், மாநில அரசுக்குமிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என குறிப்பிட்டார்.

இதற்கு தீர்வு காண மத்திய அரசு உள்பட அனைத்து மாநிலங்களும் கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதி, மத்திய அரசால் என்ன உதவி செய்ய முடியும் என தாங்கள் கேட்பதாகவும் தெரிவித்தார். மாநில அரசுகள் எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே நம்பியிருக்கவேண்டாம் என்றும் வைக்கோல் எரிப்பு பிரச்னையை தீர்க்க நிதி இல்லாவிடில் செல்லுங்கள் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றும் நீதிபதி மிஸ்ரா கூறினார்.

விதிகளை மீறும் எவரும் நடவடிக்கையில் இருந்து தப்பமுடியாது எனக் கூறிய நீதிபதி மிஸ்ரா வைக்கோல் எரிப்பதை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என உத்தரவிட்டதுடன் மேலும் கால அவகாசம் தரமுடியாது என்றும் காட்டமாக கூறினார். வைக்கோலை தீவைக்காமல் அகற்றுவதற்கு 3 மாநில விவசாயிகளுக்கும் குவிண்டாலுக்கு 100 ரூபாய் வழங்கவும் ஆணையிட்டனர்.

First published:

Tags: Air pollution