குளிர்காலம் தொடங்கினாலே டெல்லியில் காற்று மாசு பிரச்னை தீவிரமடைவது வழக்கமாக உள்ளது. பல ஆண்டுகளாகவே டெல்லி காற்று மாசு சிக்கலை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இந்த காற்று மாசு சிக்கல் தலைநகர் டெல்லியை விடாமல் துரத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு பாதிப்பின் தீவிரம் குறைவாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின் படி டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தொட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் காற்று மாசு மீண்டும் தீவிரத் தன்மையை எட்டியுள்ளது. அரசு காற்று தர குறியீட்டை(AQI) 6 வகைகளாக தரம் பிரித்துள்ளது.
அதன்படி, தரக்குறியீட்டு புள்ளிகள் 300க்கு மேல் தாண்டினாலே அது அபாயகரமானதாகும். தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 400 புள்ளிகளை மீண்டும் எட்டியுள்ளது. PM 2.5 எனப்படும் நுரையீரலை பாதிக்கும் துகள்கள் அதிக அளவில் உள்ளதையே இந்த குறியீடு காட்டுகிறது. எனவே, GRAP Stage III செயல் திட்டத்தை மத்திய காற்று தர குழு அமல்படுத்தியுள்ளது.
அதன்படி, டெல்லியில் அத்தியவாசியம் இல்லாத கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மிக அத்தியாவசிய தேவைகள் இன்றி கட்டட கட்டுமான பணிகள், உடைப்பு பணிகள், கற்கள் உடைக்கும் பணிகள், சுரங்கப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த தடை குறைந்தது மூன்று நாட்களுக்கு தொடரும். பின்னர் காற்றின் தரத்தை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air pollution, Delhi, Pollution