டெல்லி காற்று மாசுபாடு! 40% பேர் நகரத்தை விட்டு வெளியேறவிருப்பம் - ஆய்வுத் தகவல்
டெல்லி காற்று மாசுபாடு! 40% பேர் நகரத்தை விட்டு வெளியேறவிருப்பம் - ஆய்வுத் தகவல்
டெல்லி காற்று மாசுபாடு
13 சதவீதம் பேர் டெல்லியை விட்டு வேறு எங்கும் வெளியே செல்வதற்கு வழி இல்லை. இந்த காற்று மாசை சகித்துக் கொண்டு வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டின் காரணமாக 40% சதவிதம் அந்த நகரத்தை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
தீபாவளியை அடுத்து டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மிகவும் அபாய அளவான 500 புள்ளிகளைத் தாண்டியது. அதனால் இரு நாட்களுக்கு முன்பு சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதோடு பள்ளிகளுக்கும் நாளை மறுநாள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு டேங்கர் லாரிகள் மூலம் சாலைகளில் தண்ணீரைத் தெளித்து மாசை குறைக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், லோக்கல்சர்க்கிள் என்ற ஆன்லைன் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் 17 ஆயிரம் மக்கள் பங்கேற்றுள்ளனர். அந்த ஆய்வில், ‘13 சதவீதம் பேர் டெல்லியை விட்டு வேறு எங்கும் வெளியே செல்வதற்கு வழி இல்லை. இந்த காற்று மாசை சகித்துக் கொண்டு வாழ்ந்துவிட வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ளனர். 40% டெல்லி மற்றும் என்.ஆர்.சி பகுதிகளை விட்டு வேறு நகரங்களில் குடியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
புதிய சுவாசக் கருவிகளையும், மரங்களையும் வளர்த்து டெல்லியிலேயே வாழ விரும்புவதாகவும் 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இன்று காலையிலிருந்து 37 விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ திருப்பிவிடப்பட்டுள்ளன.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.