• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • டெல்லி காற்று மாசு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி காற்று மாசு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி காற்று மாசு

டெல்லி காற்று மாசு

டெல்லி காற்று மாசுவுக்கு விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது மட்டுமே காரணம் அல்ல என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தொழிற்சாலைகள், மின்சாரம், வாகனப் போக்குவரத்து ஆகியவற்றை காரணமாக சுட்டிக்காட்டியது.

  • Share this:
    டெல்லியில் காற்று மாசுவின் அளவு அதிகரித்து காணப்படும் நிலையில், ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும், வேளாண் கழிவுப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விவசாயிகளை வலியுறுத்த வேண்டும் என்றும் மத்திய மற்றும் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    தலைநகர் டெல்லியில் மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு 400-யை தாண்டி நிற்கிறது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுவுக்கு காரணம் என மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன.

    டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் க்டந்த சனிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லியில் இருப்பது என்பது ஒருவர் 20 சிகரெட்டுகளை குடிப்பதற்கு சமம் என்று மாநில அரசு கூறியுள்ளது. இதனை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் இதற்கு என்னதான் தீர்வு? எமர்ஜென்சி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் 2 நாட்களுக்கு பொது முடக்கத்தை அறிவியுங்கள் என்று கூறியிருந்தது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டெல்லியில் பொது முடக்கத்தை அறிவிக்க தயாராக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்தது. எனினும், இதேபோன்ற பொது முடக்கத்தை டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் அமல்படுத்துவதே அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றும் டெல்லி அரசு தெரிவித்தது.

    இதையும் படிங்க: தமிழகம் பத்து ஆண்டுகளாக பணம் தரவில்லை- ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்!


    சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, அண்டை பகுதிகளில் விவசாயிகள் எரிக்கும் வேளாண் குப்பைகள் காற்று மாசுவுக்கு 10 சதவீதம் காரணம் என்று தெரிவித்தனர்.  இதையடுத்து,  உச்ச நீதிமன்றம்,  தில்லியில் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணங்கள் தொழிற்சாலைகள், மின்சாரம், வாகனப் போக்குவரத்து ஆகியவை என்றும் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது மட்டுமே காரணம் அல்ல என்றும் தெரிவித்தது.

    வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை (Work from home)  அனுமதிக்க வேண்டும் என்றும் வேளாண் கழிவுப் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று விவசாயிகளை வலியுறுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். காற்று மாசு தொடர்பாக  நாளை அவசர ஆலோசனை நடத்துமாறும், இதில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஹரியானாவைச் சேர்ந்த தலைமை செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்றும் தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்தி வைத்தனர்.

    மேலும் படிங்க: சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய அவசர சட்டம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: