டெல்லியில் தகுதியானவர்கள் அனைவருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தலைநகரில் ஒரு கோடியே 48,33,000 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள் எனக் கூறியுள்ளார்.
👏👏Delhi completes first dose to 100% eligible people - 148.33 lakh
Salute to Doctors, ANMs, Teachers, ASHAs, CDVs and all other Frontline workers. Congratulations to DMs, CDMOs, DIOs and all district functionaries
— Arvind Kejriwal (@ArvindKejriwal) December 24, 2021
Also read... சாதிக்க எதுவும் தடையில்லை..! அரசு வேலையில் சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்
இவர்கள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 100% முதல் டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை அடைய உதவிய மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என அனைவருக்கும் கெஜ்ரிவால் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
Also read... தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஊழியர்களுக்கு எச்சரிக்கை - ஐடி பெறுநிறுவனம் அறிவிப்பு!
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 684-ஆக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal, Corona Vaccine, Delhi