Lok Sabha Election 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Lok Sabha Election 2019: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
வாக்குப்பதிவு.
  • Share this:
மக்களவை தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தலைநகர் டெல்லி மற்றும் 6 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவில் 10 கோடி பேர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசத்தில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஹரியானாவில் 10 தொகுதிகள், பீகார், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தலா 8 தொகுதிகளிலும், ஜார்கண்டில் 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


மேற்கு வங்கத்தில் நடைபெற்ற கடந்த 5 கட்ட வாக்குப்பதிவிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், ஆறாம் கட்ட வாக்குப்பதிவில் வன்முறையை தவிர்க்க 770 கம்பெனி மத்திய படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளன.

ஆறாம் கட்ட தேர்தலில் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக் விஜய் சிங், ஷீலா தீட்சித், ஜோதிராதித்யா சிந்தியா, கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் அசம்கர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக போஜ்புரி நடிகர் தினேஷ் லால் யாதவை பாஜக களம் இறக்கியுள்ளது.இதையும் பாருங்க..

First published: May 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்