முகப்பு /செய்தி /இந்தியா / புதிய திருப்பமாக விஜய் மல்லையா வழக்கின் ஆவணங்கள் மாயம்

புதிய திருப்பமாக விஜய் மல்லையா வழக்கின் ஆவணங்கள் மாயம்

தொழிலதிபர் விஜய் மல்லையா.

தொழிலதிபர் விஜய் மல்லையா.

விஜய் மல்லையா வழக்கின் சில ஆவணங்கள் மாயமாகியுள்ள நிலையில், விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனங்களின் பெயரில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலையில், நாட்டைவிட்டு வெளியேறி, லண்டனில் அவர் தஞ்சமடைந்துள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், புதிய திருப்பமாக வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கின் குறிப்பிட்ட சில ஆவணங்கள் தற்போது மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கு விசாரணையின் போது இது தெரியவந்த நிலையில், மனுதாரர் தரப்பு மற்றும் அரசுத்தரப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை வரும் 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

First published:

Tags: Vijay Mallya