மாதாந்திர ஓய்வூதிய திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய ஆண்டு அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதுகாப்புத்துறையில் 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு பழைய ஓய்வுதியமும் அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய ஓய்வூதிய முறையும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக மே 17-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில், 43,774 பயனாளர்கள் தங்களின் சரியான விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் எனவே வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் ஓய்வூதியதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி ஹோட்டலில் கெட்டுப் போன சிக்கன்.. எச்சரித்து சென்ற அதிகாரிகள்
ஆண்ட்ராய்டு பயனாளர்கள் டிஜிட்டல் ஜீவன் பிரமான் ஆன்லைன்/ ஜீவன் பிரமான் ஃபேஸ் ஆப் மூலம் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம். அருகில் உள்ள Common service centres சென்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.