ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

கொரோனா பாதிப்பின் 3வது அலை இந்தியாவில் தீவிரமாக வீசி வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலையில் தப்பித்துக் கொண்டவர்கள் பலர், 3வது அலையில் சிக்கியுள்ளார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளுமாறு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பின் 3வது அலை இந்தியாவில் தீவிரமாக வீசி வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலையில் தப்பித்துக் கொண்டவர்கள் பலர், 3வது அலையில் சிக்கியுள்ளார்கள்.

  இதற்கிடையே, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வரும் நிலையில், தொற்று ஏற்பட்டாலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

  இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், 'லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு எனக்கு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

  பாதுகாப்பு அமைச்சர் நலம் பெற வேண்டி, ட்விட்டரில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க : இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு

  இன்று காலை மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாசிடிவ் விகிதம் 13.29 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டால், குறைந்தது 13 பேருக்காவது தொற்று உறுதி செய்யப்படுகிறது.

  கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நாள் ஒன்றுக்கான பாதிப்பு அதிகபட்சமாக 15 ஆயிரம் வரை இருந்தது. இந்நிலையில் தற்போது ஒன்றரை லட்சத்தை தாண்டி 2 லட்சத்தை கொரோனா பாதிப்பு நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  இதையும் படிங்க : ஓமைக்ரான் ஓர் இயற்கையான தடுப்பூசி: வல்லுனர்களின் நம்பிக்கையா? அபாயகரமான கருத்தா?

  Published by:Musthak
  First published: