Home /News /national /

அக்னிபாத் திட்டத்தில் இனி பாதுகாப்புப்படையில் இளைஞர்களுக்கு வேலை - ராஜ்நாத் சிங்

அக்னிபாத் திட்டத்தில் இனி பாதுகாப்புப்படையில் இளைஞர்களுக்கு வேலை - ராஜ்நாத் சிங்

அக்னிபாத் திட்டம்

அக்னிபாத் திட்டம்

Agnipath: பணியில் இருக்கும்போது அவர்களுக்கு 48 லட்ச ரூபாய் மதிப்பில் காப்பீடு அளிக்கப்படும். படையில் இருந்து வெளியே செல்லும் இளைஞர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்கப்படும். இது அவர்களது அடுத்தகட்ட வேலைகளுக்கு உதவியாக இருக்கும்.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் (CCEA) மத்திய அமைச்சரவையும் கூடி ஆயுதப் படைகளுக்கான அக்னிபாத் எனும் புதிய பாதுகாப்பு படை ஆட்சேர்ப்புத் திட்டம் குறித்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தன. அதன் அடிப்படையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபாத் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புப் படைகளுக்கான ‘அக்னிபத்’ ஆள்சேர்ப்புத் திட்டத்தின் கீழ், முக்கிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.



பாதுகாப்புப் படையின் செலவீனங்களைக் குறைக்கவும் படைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் இத்திட்டம் பயன் படும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கப்பல் படை, ராணுவம், விமானம் என்று முப்படைகளிலும் இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்படுவர். இராணுவத்தின் சிப்பாய்களைப் போல் அகினி வீரர்கள் என்று இவர்களுக்கு தனி பதவி உருவாக்கப்படும். ஆபீசர் ரெங்குக்கு கீழ் இவர்களது பதவி ஒதுக்கப்படும்.

இவர்களுக்கென தனி உடையும் உருவாக்கப்படும். இந்திட்டதின் கீழ் சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இதில் சேரலாம். அவர்களுக்கு மாதம் 30,000 முதல் 45,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஆனால் ஓய்வூதிய வசதி கிடையாது.

நான்கு வருடம் கழித்து செல்லும் போது சேவை நிதியாக ₹11 லட்சம் வழங்கப்படும். நான்கு வருடங்களுக்குப் பிறகு 25 % வீரர்கள் பிரதானப் படையில் சேர்க்கப்படுவர். பணியில் தொடரும் இளைஞர்கள் மற்ற வீரர்களைப் போல் 15 வருடம் பணியாற்றலாம். அவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு.

பணியில் இருக்கும்போது அவர்களுக்கு 48 லட்ச ரூபாய் மதிப்பில் காப்பீடு அளிக்கப்படும். படையில் இருந்து வெளியே செல்லும் இளைஞர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்கப்படும். இது அவர்களது அடுத்தகட்ட வேலைகளுக்கு உதவியாக இருக்கும்

ஏற்கனவே 8 நாடுகளில் பழக்கத்தில் உள்ள இது போன்ற முறைகளை திறனாய்வு செய்து இராணுவத் துறை அமைச்சகம் இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Army, Army jobs, Rajnath singh

அடுத்த செய்தி