சியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினற்கு ராஜ்நாத் சிங் இரங்கல்...!

சியாச்சினில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினற்கு ராஜ்நாத் சிங் இரங்கல்...!
அமைச்சர் ராஜ்நாத் சிங்
  • News18
  • Last Updated: November 19, 2019, 2:10 PM IST
  • Share this:
காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 19,000 அடி உயரத்தில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சியாச்சின் மலைப்பகுதி உள்ளது.

இது, இந்தியா- பாகிஸ்தான் எல்லை என்பதால் இங்கு ராணுவ வீரர்களின் முகாம் உள்ளது. இதன் அருகே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.


அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 8 வீரர்கள் சிக்கி காயமடைந்துள்ளனர். இதையடுத்து, பன்சரிவில் சிக்கிய அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், பலத்த காயமடைந்ததில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Also see...
First published: November 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading