ஹோம் /நியூஸ் /இந்தியா /

சாவர்கர் மீதான விமர்சனம் - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

சாவர்கர் மீதான விமர்சனம் - ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு

சாவர்கர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக மகாராஷ்டிரா காவல் நிலையத்தில் ராகுல் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Maharashtra, India

  இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கியது. பின்னர் கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுவருகிறது.

  தனது ஒற்றுமை பயணத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம் ஹங்கோலியில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல், 24 வயதில் நாட்டிற்காக தனது இன்னுயிரை கொடுத்தவர் பிர்சா முண்டா. அவர் சாவர்க்கரைப் போல ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து போகவில்லை ஆங்கிலேயர்கள் முண்டாவுக்கு எத்தனையோ சலுகைகள் அளிக்க முன்வந்த போதிலும் அதை எல்லாம் ஏற்காமல் போராட்டம் நடத்தியவர். ஆனால் விடுதலை போராட்ட வீரராக ஆர்எஸ்எஸ் உருவகப்படுத்தும்

  வீர சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது தன்னை மன்னித்து தனக்கு விடுதலை வழங்குமாறு மன்றாடியவர் எனக் கூறினார். மேலும் ஆங்கிலேயர்கள் அளித்த ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்தவர் வீர சாவர்க்கர் என்று பேசியுள்ளார். சாவர்கர் குறித்து ராகுல் காந்தியின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சாவர்கர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர். எனவே, மகாராஷ்டிராவில் வந்து சாவர்கரை விமர்சித்து பேசுவதை ஏற்க முடியாது என உத்தவ் தாக்ரே சிவசேனா பிரிவைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: அரசு வாகனத்துடன் இன்ஸ்டாகிராமில் கெத்து போஸ்ட்... ஐஏஎஸ் அதிகாரி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை

  அதேபோல், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிராக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி பிரமுகர் வந்தனா டோங்ரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது இபிகோ 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் தானே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சாவர்கர் பேரன் ரஞ்சித் சாவர்கரும் ராகுல் காந்தி மீது காவல்நிலையத்தில் அவதூறு புகார் அளித்திருந்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Defamation Case, Maharashtra, Rahul gandhi