HOME»NEWS»NATIONAL»deepavali 2020 pm modi insists to buy local products for deepavali festival vocal for local mg

’தீபாவளி பண்டிகைக்கு இந்தியப் பொருட்களை வாங்குங்கள், மற்றவர்களையும் வாங்கச் சொல்லுங்கள்’ - பிரதமர் மோடி வலியுறுத்தல்..

Deepavali 2020: தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்

’தீபாவளி பண்டிகைக்கு இந்தியப் பொருட்களை வாங்குங்கள், மற்றவர்களையும் வாங்கச் சொல்லுங்கள்’   - பிரதமர் மோடி வலியுறுத்தல்..
பிரதமர் மோடி
  • Share this:

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி நேற்று உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ.614 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார். 

காணொலி மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி,  நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தீபாவளி பண்டிகைக்கு அனைவரும் உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள். ‘தீபாவளிக்கு உள்நாட்டு பொருட்கள்’ என்ற இந்த கோஷம் எங்கும் எதிரொலிக்க வேண்டும். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதால், உள்நாட்டு அடையாளம் வலுப்படுவதுடன், அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு தீபாவளி ஒளிமயமாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.


உள்நாட்டு பொருட்களுடன் தீபாவளி கொண்டாடும்போது, பொருளாதாரமும் வலுவடையும். எனவே, பெருமையுடன் உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள் என்று வாரணாசி மக்களையும், நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.உள்நாட்டு பொருட்களை வாங்குவது மட்டுமல்லாமல் அவற்றைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்பதால், அவர்களின் உற்பத்தியும் விற்பனையும் செய்ய வழிவகுத்துக்கொடுங்கள் என வலியுறுத்தினார்.


மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், விவசாயிகளை சந்தையுடன் நேரடியாக இணைக்கும். இடைத்தரகர்களை அப்புறப்படுத்தும். கிழக்கு உத்தரபிரதேச விவசாயிகளும் பலன் அடைவார்கள். விவசாயிகளுக்கு சொத்து விவர அட்டை வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.


Published by:Gunavathy
First published: