அசாம் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். இந்த விழாவில் அசாம் மாநிலத்தில் புதிதாக 7 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.இதில் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடாவும் பங்கேற்றார்.
84 வயதான ரத்தன் டாடா பொது விழாவில் தற்போது பங்கேற்பது அரிய நிகழ்வாகும். அசாம் மாநிலத்தில் புற்றுநோய் சிகிச்சை அமைப்பை அம்மாநில அரசுடன் இணைந்து டாடா குழுமம் நடத்துகிறது. இந்த அமைப்பு மாநிலம் முழுவதும் 17 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் கட்ட முடிவு செய்த நிலையில், 10 மருத்துவமனைகளில் ஏழு மருத்துமனைகளின் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றின் கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிதாக 7 மருத்துமனைக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த விழாவில் பிரதமர் மோடி, ரத்தன் டாடா, மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்று பேசிய ரத்தன் டாடா,"எனது கடைசி காலத்தை அசாமிற்கு வழங்குகிறேன். அசாம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு அனைவரையும் அங்கீகரிக்க விரும்புகிறேன். அசாம் வரலாற்றில் இது முக்கிய தினமாகும். புற்றுநோய் பணக்காரர்களின் நோய் அல்ல. இந்தியாவின் சிறிய மாநிலத்தில் கூட உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வசதிகள் உள்ளது" என அசாம் பெருமையுடன் தெரிவித்துக்கொள்ளலாம் என்றார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, "அசாமிற்கு இன்று புதிதாக ஏழு மருத்துவமனைகள் கிடைத்துள்ளது. முன்பெல்லாம், ஏழு வருடத்திற்கு ஒரு மருத்துவமனை திறந்தால் அதை கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. கட்டுமானத்தில் உள்ள மூன்று மருத்துவமனையின் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, மக்களுக்கு விரைவில் சேவை கிடைக்கும். மக்கள் அனைவரும் யோகா செய்து, சுகாதாரத்தை பின்பற்றி நலமுடன் வாழ வேண்டும். மருத்துவமனைகள் உங்கள் சேவைக்காக இருந்தாலும், மக்கள் நலமுடன் வாழ்ந்து அவை காலியாக இருக்கவே நான் விரும்புகிறேன்." என்றார்.
இதையும் படிங்க: ஒரு பேரல் கச்சா எண்ணெய்யில் எத்தனை லிட்டர் பெட்ரோல், டீசல் கிடைக்கும்- லாபம் என்ன?
அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசுகையில், "இந்த மிகப் பெரிய புற்றுநோய் சிகிச்சை திட்டம் அசாமிற்கு மட்டுமல்லாது தெற்காசியா முழுமைக்கும் நன்மை பயக்கும். இது மாபெரும் சாதனை. இதற்காக ரத்தன் டாடா மற்றும் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, PM Modi, Ratan TATA