கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்கள் அசிடிட்டி மற்றும் பசியின்மையை புறக்கணிக்க கூடாது - ஏன் தெரியுமா?

மாதிரி படம்

கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பின்னரும் கூட சுமார் மூன்று மாதங்களுக்கு இது மாதிரியான பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

  • Share this:
நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் அலை நீடிக்கும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வரும் பல நோயாளிகள் நீண்ட கால அறிகுறிகளை கொண்டிருக்கிறார்கள். இதை மருத்துவர்கள் லாங் கோவிட் (long covid) என்று குறிப்பிடுகின்றனர். மேலும் இது கோவிட்டுக்கு பிந்தைய அறிகுறி (Post Covid Syndrome) என்றும் குறிப்பிடப்படுகிறது. அதிகரித்து வரும் லாங் கோவிட் பாதிப்புகள் மக்களிடையே கவலைகளை அதிகரிக்க செய்துள்ளது. குறிப்பாக தொற்றால் தீவிரமாக பதிக்கப்பட்டு மீண்டு வருபவர்களுக்கு தான் அதிகமாக லாங் கோவிட் பிரச்சனையின் அறிகுறிகள் காணப்படுகிறது. எனினும் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை சந்தித்த 50% கோவிட் நோயாளிகள் தொற்றிலிருந்து மீண்ட சில மாதங்களுக்கு பிறகு சில சுகாதார கோளாறுகளை எதிர் கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் சந்திக்கும் இந்த நீடித்த அறிகுறிகள் பாதிக்கப்படுபவர்களின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்நிலையில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux ) மற்றும் பசியின்மை ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் கேஸ்ட்ரோஇன்டெஸ்டினல் செக்கியூலி (gastrointestinal sequelae) பற்றி கேஸ்ட்ரோஎன்டாலஜி கன்சல்டன்ட் டாக்டர் குணால் தாஸ் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். long Covid பல அறிகுறிகளை கொண்டிருக்கும் நேரத்தில் இவற்றில் ஒன்றாக இருக்கிறது கேஸ்ட்ரோஇன்டெஸ்டினல் செக்கியூலி. இதில் பசியின்மை, குமட்டல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்று போக்கு ஆகியவைவையும் அடங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவிட் தோற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பின்னரும் கூட சுமார் மூன்று மாதங்களுக்கு இது மாதிரியான பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக பேசிய டாக்டர் தாஸ், கோவிட் -19 தொற்று முதன்மை சுவாச அமைப்பு மூலம் உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. கிட்டத்தட்ட 60% கோவிட் நோயாளிகளில் இரைப்பை குடல் அறிகுறிகள் (Gastrointestinal symptoms) உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். கோவிட் தொற்றின் இந்த 2-வது அலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளில் குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று காய்ச்சல் எனப்படும் குடல் தொற்று போன்ற அறிகுறிகள் இருப்பதை கவனித்தோம்.

மே 2021-ல் லான்செட் கேஸ்ட்ரோ ஹெபடோல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, தொற்றில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுமார் 44% நோயாளிகளுக்கு கேஸ்ட்ரோஇன்டெஸ்டினல் செக்கியூலி காணப்பட்டது. இது நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆன பின் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். அட்மிட் செய்யப்படும் போதோ அல்லது தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்போ இவர்களுக்கு இந்த கோளாறு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் தாஸ். இந்த இரைப்பை குடல் நிலைக்கு ஆக்சிஜன் வழங்கல் குறைவதால் உடலின் ஒரு பகுதி பாதிக்கப்படும் ஹைபோக்ஸியா காரணமாக இருக்கலாம் என்று லான்செட் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Also read... மாஸ்க் அணிந்த கொரோனா மாதா - தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டி பிரார்த்திக்கும் கிராமவாசிகள்!

ரத்த ஆக்ஸிஜன் செறிவு குறைவது கடுமையான நிமோனியா மற்றும் கேஸ்ட்ரோஇன்டெஸ்டினல் செக்கியூலி ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புடைய ஒரு அறிகுறியாகும். GI sequelae-ன் சில பொதுவான அறிகுறிகள் அடிவயிற்றில் வலி, வாந்தி, அடிக்கடி ஏப்பம், மலம் கழிக்கும் போது ரத்தம் வருவது உள்ளிட்டவை அடக்கம். இது போன்ற அறிகுறிகள் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் தாமதமின்றி உடனே ஒரு மருத்துரை சென்று பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் டாக்டர் தாஸ்.

கோவிட் தொற்றிலிருந்து மீண்ட 3 மாதங்களுக்குள் எந்த நேரத்திலும் நோயாளிகளுக்கு GI sequelae தோன்றும் என்று லான்செட் அறிக்கையின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கான சிகிச்சை ஆன்டாக்சிட்கள், ஆன்டி எமெடிக்ஸ் மற்றும் ஆன்டி டயரியல் ஏஜென்ட்ஸ் (anti diarrhoeal) உள்ளிட்ட சிம்ப்டோமெடிக் பயன்பாடு (symptomatic use) ஆகும். பெரும்பாலும் இவர்களுக்கு ஆன்டி-பயாடிக்ஸ் தேவையில்லை. நல்ல சத்தான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது, வழக்கமான உடற்பயிற்சியும் மற்றும் மன அழுத்தமில்லா வாழ்க்கை முறை உள்ளிட்டவை இதிலிருந்து நோயாளிகள் மீள உதவும் என்று டாக்டர் தாஸ் கூறி உள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: