Home /News /national /

அக்.2-ம் தேதிக்குள் இந்து தேசமாக அறிவிக்க வேண்டும், இல்லையேல் ஜலசமாதி அடைவேன்: ஜகத்குரு பரமஹன்ஸ்

அக்.2-ம் தேதிக்குள் இந்து தேசமாக அறிவிக்க வேண்டும், இல்லையேல் ஜலசமாதி அடைவேன்: ஜகத்குரு பரமஹன்ஸ்

ஜகத் குரு பரமஹன்ச் ஆச்சார்ய மகராஜ்

ஜகத் குரு பரமஹன்ச் ஆச்சார்ய மகராஜ்

இந்தியாவை இந்து தேசமாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதிக்குள் அறிவிக்கவில்லையெனில் சரயு நதியில் ஜலசமாதி அடைவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியாவை இந்து தேசமாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதிக்குள் அறிவிக்கவில்லையெனில் சரயு நதியில் ஜலசமாதி அடைவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன்.மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    ஏற்கெனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

    கொரோனா 2வது அலையின் போது கும்பமேளாவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது இத்தகைய மடாதிபதிகளை மீறி அரசால் எதுவும் செய்ய முடியாத சூழலே நிலவியது இதனையடுத்து கும்பமேளா நடந்து கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெருகியதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உ.பி.யில் தேர்தல் வரவிருப்பதால் மடாதிபதிகளை நோக்கி அரசியல் தலைவர்கள் படையெடுப்பது வழக்கம்தானே.

    அயோத்தி மடாதிபதிகள் சமூகம் இந்து சநாதன தர்ம சன்சத் என்ற அமைப்பை உருவாக்கி பரமஹன்ஸ் வைத்த கோரிக்கைகளை ஆதரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hindu Country, News On Instagram

    அடுத்த செய்தி