• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி வேண்டும் - பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி வேண்டும் - பிரதமருக்கு உத்தவ் தாக்கரே கடிதம்

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

கொரோனா பெருந்தொற்று பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்கவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

  • Share this:
    இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 50,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிகிச்சைக்கான போதிய வசதி இல்லை. ராணுவ உதவி வேண்டும் என்று ஏற்கெனவே அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநில அரசு அறிவித்த மக்கள் ஊரடங்கு, நேற்று இரவு 8 மணிக்கு அமலுக்கு வந்தது.

    இந்த ஊரடங்கின் போது உரிய காரணம் இன்றி மக்கள் வெளியில் நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை, மருந்துக்கடை போன்ற அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்றும் மற்ற அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு விதிகளை கடுமையாக அமல்படுத்த 2 லட்சம் போலீசார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, இரவு நேரத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வரும் ஒன்றாம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ.5,476 கோடியை உத்தவ் தாக்கரே அரசு ஒதுக்கியுள்ளது.

    மேலும், கொரோனா பெருந்தொற்று பரவலை இயற்கை பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி அளிக்கவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நிலநடுக்கம், அதிகனமழை, வெள்ளம் போன்ற பெரும் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் இயற்கை பேரிடராக அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட நிதியுதவிகள் வழங்கப்படும் வழக்கம். அதுபோல, கொரோனா பெருந்தொற்று பரவலையும் இயற்கை பேரிடராக அறிவித்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயற்கை பேரிடர் சமயங்களில் வழங்கப்படும் தனிப்பட்ட உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: