DAP : டிஏபி உர மானியம் மூட்டைக்கு ரூ.1200-ஆக உயத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

உரம்

ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கான மானியம் 500 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    டிஏபி உர மானியத்தை மூட்டை ஒன்றுக்கு 1,200 ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் கடல்சார் தொழில்நுட்ப மேம்பாடு குறித்தும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் டிஏபி (DAP) உரத்துக்கான மானியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரசாயனத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கான மானியம் 500 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2,400 ரூபாய் விலை கொண்ட ஒரு மூட்டை டிஏபி (DAP) உரம் 1,200 ரூபாய் மானியம் போக 1,200 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கிடைக்கும் என்றார். மேலும் 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை டிஏபி உரத்துக்கு மேலும் 700 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசுக்கு கூடுதலாக 14 ஆயிரத்து 775 கோடி ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

    நாட்டில் யூரியாவுக்கு அடுத்தப்படியாக, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை 1,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், 500 ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு ஒரு மூட்டை 1,200 என, உற்பத்தி நிறுவனங்கள் இதை விற்பனை செய்து வந்தன. இந்நிலையில், கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் டிஏபி உரத்திற்கான மானியத்தை 140 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 1,200 ரூபாய் வரை மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, யூரியாவுக்கான மானியமாக 900 ரூபாய் வழங்கப்படுகிறது.

    Must Read : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பு: இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார்

    இந்நிலையில், ஆழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியவும், அதை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், ‘ஆழ்கடல் திட்டம்’ உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கும் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அதன்படி, கடலில் 6,000 மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை கண்டுபிடிக்க ஆய்வுகள் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: