கடன் தொல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு தற்கொலை

News18 Tamil
Updated: August 16, 2019, 9:41 PM IST
கடன் தொல்லை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சுட்டு தற்கொலை
News18 Tamil
Updated: August 16, 2019, 9:41 PM IST
கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சேர்ந்த ஓம் பிரகாஷ், நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். ஜாதகம் பார்க்கும் தனது தந்தை பட்டாச்சார்யா மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து குண்டல்பேட்டையில் உள்ள நந்தி விடுதிக்கு சென்று தங்கிய ஓம் பிரகாஷ், இன்று காலை மனைவி உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அறைக்கு சென்ற ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் 5 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...