உயர் அதிகாரிகள் பயணிப்பதற்காக சுமார் 11 கோடி ரூபாய் செலவில் 32 சொகுசுக் கார்களை தெலங்கானா அரசு வாங்கியிருப்பதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பேரிடர் காலத்தில் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.
இந்தியாவின் 29வது மாநிலமாக ஆந்திராவில் இருந்து பிரித்து 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டதில் இருந்தே அம்மாநில முதல்வராக இருந்து வருகிறார் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ்.
முதன் முதலின் மாநிலத்தை பிரிக்கும் போது 10 மாவட்டங்களே இருந்த நிலையில் தற்போது அங்கு மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் பயணிப்பதற்காக 32 சொகுசுக் கார்களை தெலங்கானா அரசு வாங்கியுள்ளது.
Also Read: கட்சித் தலைவருக்கே எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.பிக்கள்.. தனித்து விடப்பட்ட சிராக் பஸ்வான்!
மாநில அரசால் புதிதாக வாங்கப்பட்ட கியா நிறுவனத்தின் 32 கார்னிவல் ரக கார்களை ஹைதராபாத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் வைத்து நேற்று (ஜூன் 13) கொடியசைத்து தொடங்கி வைத்தார் போக்குவரத்துத்துறை அமைச்சர் புவ்வத அஜய் குமார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாரும் கலந்து கொண்டார்.
ஒரு கியா கார்னிவல் காரின் விலை சுமார் 25 முதல் 30 லட்ச ரூபாய் இருக்கும். 32 கார்களின் மொத்த விலை சுமார் 11 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரியவந்துள்ளது.
Also Read: இனி காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும்: மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் விரிசல்?
இந்நிலையில் மாநில அரசு கொரோனா பேரிடருடன் போராடிக்கொண்டிருப்பதுடன், 40,000 கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சொகுசுக் கார்கள் தான் வாங்க வேண்டுமா என எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பினர்.
மேலும், ஏற்கனவே அரசுக்கு சொந்தமான கார்கள் நல்ல நிலையில் இருக்கும் போது இது மாநில உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பதற்காக முதல்வர் சந்திர சேகர் ராவ் செய்த காரியம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மோசமான ஒரு பேரிடரை மாநிலம் சந்தித்து வரும் இந்த நேரத்தில் கொரோனா காரணமாக நிதிநெருக்கடியில் சிக்கி ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வரும் இந்த நேரத்தில் பொதுமக்களின் வரிப் பணத்தை வீணடித்த முதல்வர் சந்திர சேகர ராவின் இந்த செயல் கொடூரமான மற்றும் சிந்திக்க முடியாத வகையில் இருப்பதாகவும் பாஜக செய்தித்தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் தெரிவித்தார்.
அதே நேரத்தில் மாவட்டம் முழுவதும் கூடுதல் ஆட்சியர்கள் பயணித்து மக்கள் பணிகளில் ஈடுபட இது போன்ற நவீன சொகுசுக் கார்கள் தேவைப்படுவதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
2015ம் ஆண்டு தெலங்கானாவில் மாவட்ட ஆட்சியர்களுக்கு டொயோட்டோ ஃபார்ச்சூனர் கார்கள் கொடுக்கப்பட்டன. அப்போது 10 மாவட்டங்களே இருந்தன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chandrasekar rao, Kia motors, Telangana