70 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் இணையத்தில் வெளியானது..

70 லட்சம் பேரின் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்கள் இணையத்தில் வெளியானது..

கோப்புப் படம்

70 லட்சம் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் வெளியாகி இருப்பதாக தனியார் இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கிரெட், டெபிட் கார்டு வைத்துள்ள 70 லட்சம் இந்தியர்களின் வருமானம் தொலைபேசி எண்கள், பான் எண்கள், வங்கி கணக்கு விபரங்கள் போன்றவற்றுடன் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியானது. அவை அனைத்தும் டார்க் வெப் (Dark web) ரகசிய இணைய பக்கங்களில் வெளியாகி இருப்பதாக தனியார் இணைய பாதுகாப்பு ஆய்வாளர் ராஜ்சேகர் ராஜஹாரியா கூறியுள்ளார். இந்த பட்டியலில் முழுமையான கிரெடிட் கார்டு எண்கள் தரப்படவில்லை என்றபோதும், ஒரு பயனாளரின் பெயர், பிறந்த தேதி, வருமானம், அவர் வசிக்கும் நகரம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

  இந்த தகவல்களை விற்பனைக்காக ஹேக்கர்கள் வெளியிட்டிருக்கலாம் என்றும், வங்கிகளுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களின் தரவு சேகரிப்பு தளங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக இந்த தகவல்கள் வெளியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

  மேலும் படிக்க..பன்னாட்டு பாரதி திருவிழா இன்று தொடக்கம்.. பிரதமர் பங்கேற்று சிறப்புரை..

  இதே போல் கடந்த ஆண்டு 13 லட்சம் பேரின் தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: