Mumbai Fire | மும்பை கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு...

Mumbai Fire | மும்பை கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்வு...

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மும்பை சன்ரைஸ் மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

  • Share this:
    மும்பையில் பாந்தப் எனும் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் சன்ரைஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மூன்றாவது தளத்தில் இயங்கி வரும் அந்த மருத்துவமனையில் நள்ளிரவில் தீடிரென தீப்பற்றியது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைவதற்குள் மருத்துவமனை அமைந்துள்ள பகுதி முழுவதும் தீ மளமளவென பரவியது. சிகிச்சை பெற்று வந்த 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்குள் சிக்கித் தவித்தனர்.

    அதன்பிறகு அங்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனை வளாகத்தில் சிக்கித் தவித்த 70க்கும் மேற்பட்ட நோயாளிகளை கிரேன் உதவியுடன் மீட்டு வேறு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் இரு நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக காலையில் தகவல் வெளியானநிலையில், தற்போதுவரை அவர்களில் 9 நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    மேலும் படிக்க... தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா பாதிப்பு...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: