ஹோம் /நியூஸ் /இந்தியா /

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு... பீகாரில் பரபரப்பு

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்வு... பீகாரில் பரபரப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Bihar, India

பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. சரண் மாவட்டம் மஷ்ராக் பகுதிக்கு நேற்று சென்ற சிலர் கள்ளச்சாராயத்தை குடித்தனர். பின்னர் வீடு திரும்பிய அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், கள்ளச்சாராய விற்பனை கும்பலை கண்டறிவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தனிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கடைகளில் இனி 1, 2 சிகரெட் எல்லாம் வாங்க முடியாது - மத்திய அரசு விரைவில் புதிய உத்தரவு

தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் பீகார் கலால் வரித்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மஸ்ராக் காவல் ஆய்வாளர் மிஷ்ரா, காவலர் விகேஷ் திவாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Bihar