Home /News /national /

சேலையில் தூக்கு மாட்டி போராட்டம் - கிரணைட் சுரங்கத்திற்கு எதிராக பழங்குடி விவசாயிகள் போர்க்கொடி

சேலையில் தூக்கு மாட்டி போராட்டம் - கிரணைட் சுரங்கத்திற்கு எதிராக பழங்குடி விவசாயிகள் போர்க்கொடி

கிரணைட் நிறுவனம் எங்களுக்கு பணம் ஏதும் தரவில்லை. சிலர் சட்டவிரோதமான முறையில் பணத்திற்காக எங்கள் நிலங்களை அபகரிக்கின்றனர்.

கிரணைட் நிறுவனம் எங்களுக்கு பணம் ஏதும் தரவில்லை. சிலர் சட்டவிரோதமான முறையில் பணத்திற்காக எங்கள் நிலங்களை அபகரிக்கின்றனர்.

கிரணைட் நிறுவனம் எங்களுக்கு பணம் ஏதும் தரவில்லை. சிலர் சட்டவிரோதமான முறையில் பணத்திற்காக எங்கள் நிலங்களை அபகரிக்கின்றனர்.

    தங்கள் விளை நிலங்களை கிரணைட் சுரங்கத்திற்காக சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டாக ஆந்திர பழங்குடி பெண்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள உரவக்கொண்டா பகுதியில் பழங்குடி விவசாயப் பெண்கள் கழுத்தில் தங்களின் சேலைகளை தூக்கு கயிறாகக் கட்டி போராட்டம் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

    ஆந்திராவின் அனகபள்ளி மாவட்டம் முதுகுலா மண்டத்தில் உள்ள இப்பகுதியில் பழங்குடியினத்தவர்கள் முந்திரி விளைவித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த இடத்தில் சுரங்க வேலை செய்ய ஒரு கிரணைட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பாக எங்கள் கருத்தை கேட்காமல் கட்டாயமாக எங்கள் நிலங்களைப் பறித்துக்கொண்டதாகவும் அப்பெண்கள் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக போராடும் பெண்கள் வீடியோவில் பேசுகையில், "எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் சாவதை தவிர வேறு வழி ஏதும் இல்லை. முந்திரி தோட்டங்களை நம்பித்தான் எங்கள் வாழ்வாதாரம் உள்ளது. அது இல்லை என்றால் எங்களுக்கு பிழைக்க வழி இல்லை.

    இதையும் படிங்க - டெல்லியில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

    கிரணைட் நிறுவனம் எங்களுக்கு பணம் ஏதும் தரவில்லை. சிலர் சட்டவிரோதமான முறையில் பணத்திற்காக எங்கள் நிலங்களை அபகரிக்கின்றனர். நிலத்திற்கான ஆவணங்கள் ஏதும் எங்களிடம் இல்லை. நாங்கள் பயிர் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தற்போது ஜெசிபி இயந்திரம் மூலம் எங்கள் பயிர்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.

    முதுகுலா மண்டலத்தின் வருவாய் அலுவலர்கள் எங்கள் மீது பொய் புகார் கூறி வழக்கு பதிவு செய்ய முயற்சி செய்கிறார். கிரணைட் நிறுவனம் எங்கள் விளைநிலங்களை அழித்து அதில் சாலை போட பார்க்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும்.விரைவில் அனகபள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஏப்ரல் 11ஆம் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு அலுவலர்கள் தரப்பில் எந்தவித எதிர்வினையும் இதுவரை வரவில்லை.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Srilanka

    அடுத்த செய்தி