ஆற்றில் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருந்த இளம்பெண்... திடீரென நேர்ந்த விபரீதம்
தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்த அனுபமா பிரஜாபதி, சம்பவ நடந்த இடத்தில் இருந்த நதி பாறைகளில் நின்றபடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென வலுக்கியதால் அவர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

மாதிரி படம்
- News18
- Last Updated: January 12, 2021, 1:55 PM IST
புத்தாண்டு விடுமுறையில் சுற்றுலா சென்ற 27 வயது பெண்ணின் வாழ்க்கை ஒரு செல்ஃபியால் சோகத்தில் முடிந்தது. கடந்த ஜனவரி 3ம் தேதி செல்ஃபி (Selfie) எடுக்க முயன்ற போது ஆற்றில் விழுந்து பரிதமாக அந்த பெண் உயிரிழந்தார்.
ஒடிசாவின் (Odisha) சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா இடமான கனகுண்ட் (Kanakund) அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் பெயர் அனுபமா பிரஜாபதி (Anupama Prajapati) என்றும் இவர் ராஜ்கங்பூரின் கும்பர்பாடா (Rajgangpur's Kumbharpada) பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்த அனுபமா பிரஜாபதி, சம்பவ நடந்த இடத்தில் இருந்த நதி பாறைகளில் நின்றபடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென வழுக்கியதால் அவர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இபி நதி பாய்ந்து வருகிறது. ஆற்றில் விழுந்த அந்த பெண் பாயும் நீரால் அடித்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து தீயணைப்பு துறையினரும், குடும்பத்தினரும் பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு அனுபமா பிரஜாபதியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் செய்தி ஊடகங்களில் வந்த தகவல்களின்படி, அவர் காணாமல் போன இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த சில பாறைகளுக்கு இடையில் அவரது உடல் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
என்னதான் தொழில்நுட்பங்கள் பெருகி வந்தாலும் அவற்றால் ஏற்படும் இதுபோன்ற விபரீதங்களும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த செல்ஃபி மோகம் மக்களின் உயிரை எடுக்கும் அளவுக்கு தீவிரம் அடைத்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செல்பி மூலம் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2017ம் ஆண்டு நவம்பர் வரை உலகம் முழுவதும் செல்பி காரணமாக 259 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக, கடந்த 2018ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதில் அதிக இறப்புகள் இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் நடந்த மற்றொரு சோகமான சம்பவத்தில், 13 வயது பள்ளி மாணவர் ஒரு ரயிலின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கியதில் எரிந்து சாம்பலானான். ஒடிசாவின் பராலகேமுண்டி நகரத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், கோவிட்-சிறப்பு ரயில் கூரையில் ஏறி, ரயிலின் மேலிருந்து செல்பி எடுக்க முயன்றுள்ளான். ஆனால் அந்த சிறுவன் உயர் அழுத்த மின் கம்பியின் மீது மோதி மரணமடைந்தான்.Also read... தஞ்சாவூர் தனியார் பேருந்து மீது மின்சாரம் தாக்கியதில் 5 பயணிகள் உயிரிழப்பு
இதேபோல, 2017ம் ஆண்டில் நாக்பூரில் 11 நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஏரியின் நடுவே கவிழ்ந்தது. அதில் சென்ற குழு செல்பி எடுத்துக் கொண்டதாகவும், நாக்பூருக்கு அருகிலுள்ள வேனா அணையில் இருந்து பேஸ்புக் லைவ் நடத்தும் போது அவர்களது படகு கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 9 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் அப்போது வெளியாகின. இந்தியாவில் மட்டுமல்ல, செல்பி மூலம் மரணம் என்பது உலகம் முழுவதும் இறப்புகள் மற்றும் காயங்களுக்கு வழிவகுத்து வருகின்றன. கடந்த வாரத்தில், பாகிஸ்தானில் 50 வயது நபர் ஒருவர் லாகூர் கோட்டையில் இருக்கும் சுமார் 200 அடி சுவரின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
ஒடிசாவின் (Odisha) சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா இடமான கனகுண்ட் (Kanakund) அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் பெயர் அனுபமா பிரஜாபதி (Anupama Prajapati) என்றும் இவர் ராஜ்கங்பூரின் கும்பர்பாடா (Rajgangpur's Kumbharpada) பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்த அனுபமா பிரஜாபதி, சம்பவ நடந்த இடத்தில் இருந்த நதி பாறைகளில் நின்றபடி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, திடீரென வழுக்கியதால் அவர் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இபி நதி பாய்ந்து வருகிறது. ஆற்றில் விழுந்த அந்த பெண் பாயும் நீரால் அடித்து செல்லப்பட்டார்.