மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக உயர்வு!

அகவிலைப்படி உயர்வு

இந்த உயர்வு 2021ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்று தெரிவித்த அனுராக் தாக்கூர்,  இதன் மூலம் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறினார்

 • Share this:
  மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 தடவை அகவிலைப்படி அதிகரித்து வழங்கப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓராண்டுக்கும் மேலாக அகவிலைப்படி  உயர்த்தி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்,பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த தகவலை மத்திய  தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  இந்த உயர்வு 2021ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதியிட்டு கணக்கிடப்படும் என்று தெரிவித்த அவர்,  இதன் மூலம் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும்  65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.

  இதையும் படிங்க: மதுபானங்களின் விலையை உயர்த்திய புதுச்சேரி அரசு!


  இதன் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு  34,401 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என்றும் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.   ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். தற்போது ஜூலை மாதம் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  2020ம் ஆண்டு ஜனவரி முதல்  2021ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி வரையிலான காலத்துக்கு 17 சதவீதமே அகவிலைப்படியாக தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
  Published by:Murugesh M
  First published: