ஹோம் /நியூஸ் /இந்தியா /

50 லட்சம் பேரை கொல்லக்கூடிய கொடிய போதைப்பொருள் பறிமுதல்!

50 லட்சம் பேரை கொல்லக்கூடிய கொடிய போதைப்பொருள் பறிமுதல்!

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சுமார் 50 லட்சம் பேரை ஒரே கணத்தில் கொல்லக்கூடிய ஃபென்டனில் எனப்படும் கொடிய ரசாயன போதைப்பொருளை வைத்திருந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கடந்த வாரம் நடத்திய ஆய்வில் 40 முதல் 50 லட்சம் பேரை கொல்லும் 9 கிலோகிரம் கொடிய ஆட்கொல்லி ரசாயன போதைப்பொருள் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக, அந்த இயக்குநரக அதிகாரிகள் கூறியதாவது: இந்தூரில் அரசின் உரிய அனுமதியின்றி ஆராய்ச்சிக் கூடங்களை சிலர் சட்டவிரோதமாக இயக்கி வருவதாக தகவல் கிடைத்தது.

பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆராய்சியாளர்களுடன் இணைந்து அங்கு தேடுதல் வேட்டையில் இறங்கினோம். இதில், உள்ளூர் தொழிலதிபரும்,  ஆராய்ச்சியாளருமான ஒருவரின் ஆய்வுக் கூடத்திலிருந்து `ஃபென்டனில்’ எனப்படும் கொடிய ரசாயன செயற்கை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் எடை சுமார் 9 கிலோகிராம்.

ஆய்வுக்குப் பிறகு அந்த ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர் என்று தெரியவந்துள்ளது. இவருடன் சேர்த்து மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

உண்மையில் ஃபென்டனில் ரசாயனமானது பிற வேதிப்பொருட்களுடன் சேர்த்து மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. எனினும், நேரடியாக எடுத்துக்கொள்ளும்போது அது உயிர்க்கொல்லி விஷமாக மாறும்.

வெறும் 2 மில்லி கிராம் ஃபென்டனிலை உட்கொண்டால் உயிரிழப்பு நிச்சயம். தற்போது பறிமுதல் செய்யப்பட்ட ஃபென்டனில் ரசாயனத்தின் எடை 9 கிலோகிராம். இதன்மூலம், சுமார் 40 முதல் 50 லட்சம் பேரைக் கொல்லமுடியும். இந்தியாவில் இத்தகைய ஆட்கொல்லி ரசாயனம் பெரிய அளவில் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Deadly Chemical, Fentanyl, Indore, Seized