கணவர், மாமியாரின் கொடூர தாக்குதல்.. அதிரவைத்த ஆடியோ பதிவு – கேரளாவை உலுக்கிய மரணம்

கேரளா சுனிஷா

இன்று இரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை என சகோதரனுக்கு சுனிஷா ஆடியோ அனுப்பிய நிலையில் மறுநாள் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கியநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் கேரளத்தில் இதோ அடுத்த பயங்கரம் இளம்பெண் சுனிஷா தன் கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

  விஷ்மயா.. அர்ச்சனா.. சுசித்ரா வரிசையில் சுனிஷாவின் மரணம் கேரளத்தை உலுக்கியுள்ளது. என்னை வந்து அழைத்துச் செல் என முதல்நாள்  சகோதரனிடம் போனில் கூறிய நிலையில் அடுத்தநாள் அவரை சடலமாகத்தான் கண்டுள்ளனர் அவரது குடும்பத்தினர். குடும்ப வன்முறையால் இளம்பெண்ணின் உயிர் பறிப்போயுள்ளது.

  சுனிஷா மரணத்துக்கு முதல்நாள் இரவு தனது சகோதரனுக்கு அனுப்பிய ஆடியோ கேரள செய்தி சேனல்களில் வெளியாகியுள்ளது.   “உன்னால் முடிந்தால் தயவுசெய்து இப்போதே வந்து என்னை அழைத்துச் செல். நான் உங்களுடன் வரத் தயாராக இருக்கிறேன். அவரும் அவரது தாயாரும் என்னை அடித்து நொறுக்கிவிட்டனர். இன்று இரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை” என தனது சகோதரனுக்கு ஆடியோவை அனுப்பியுள்ளார். அதில் மனரீதியாகவும் ,உடல்ரீதியாகவும் அனுபவித்த இன்னல்களை கூறியுள்ளார். மறுநாள் காலையில் சுனிஷா பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தகவல்தான் அவரது குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது.

  சுனிஷாவுக்கும் கன்னூர் மாவட்டம் பையனூரை பூர்வீகமாக கொண்ட விஜீஷ் என்ற நபருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்தது முதலே கணவர் வீட்டில் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார்.  இதுகுறித்து பேசிய அந்தப்பெண்ணின் உறவினர்கள், ‘ திருமணமனான நாள் முதலே அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்துள்ளார். உறவினர்களுக்கு போன் செய்து கணவர் வீட்டினர் துன்புறுத்துவது குறித்து பேசுவார். இருப்பினும் அவர் அங்கேதான் இருந்தார்.

  அவரது கணவர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அவரது மாமியார் சுனிதாவின் முடியை பிடித்து இழுத்து தாக்கி கடுமையான சொற்களால் வசைப்பாடியுள்ளார். மாமனாரும் ஹெல்மெட்டை கொண்டு அடித்துள்ளார். அங்கு நடக்கும் கொடுமைகளை எல்லாம் எங்களிடம் கூறுவதால் அவரது செல்போனை வாங்கி உடைத்துள்ளனர். கடந்த ஒருமாதமாக அந்த வீட்டில் அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை.  கடைகளில் பார்சல் வாங்கித்தான் சாப்பிட்டு வந்துள்ளார். நாங்கள் அவரை அழைத்து வர பலமுறை அவரது வீட்டிற்கு சென்றபோது எங்களுடன் அவரது கணவர் செல்வதற்கு அனுமதிக்கவில்லை என்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சுனிஷா சகோதரர் சுதீஷன் பேசுகையில், “ எங்களிடம் பலமுறை போன் செய்து அழைத்து செல்லுமாறு கூறினார். நாங்களும் பையனூர் காவல்நிலையத்தை தொடர்புக்கொண்டு உதவிக்கேட்டோம். அவர்களது குடும்பத்திற்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் தனியாக வரவேண்டாம் என சகோதரி கூறினார். போலீஸார் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் நாளைக்கு அனுப்பி வைத்து விடுகிறோம் என நாள்களை இழுத்து வந்தனர்.

  அவளும் வேறு வழியில்லாமல் அங்கேயே இருந்தால். அதன்பின் அவள் எங்களை தொடர்புக்கொள்ளவே இல்லை.அவளை தனியாக அவரது குடும்பத்தினர் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. நாங்களும் ஒரு மூன்று தடவை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். ஆகஸ்ட் 5-ம் தேதி கூட கடைசியாக புகார் அளித்தோம்” என வேதனையுடன்  கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கண்ணூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: