Home /News /national /

உயிரிழந்த குழந்தைகளுக்கு 30 வயதில் திருமணம்! இல்லாத ஜோடிக்கு ஊர் கூடி கல்யாணம்- ஆச்சரியமளிக்கும் ஊர் வழக்கம்!

உயிரிழந்த குழந்தைகளுக்கு 30 வயதில் திருமணம்! இல்லாத ஜோடிக்கு ஊர் கூடி கல்யாணம்- ஆச்சரியமளிக்கும் ஊர் வழக்கம்!

பிறக்கும்போதே உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

பிறக்கும்போதே உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

பிறக்கும்போதே உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில் நடந்த ஒரு விநோதமான திருமண சடங்கு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமண சடங்கு துளுவில் ‘குலே மடிமே’ என்று அழைக்கப்படுகிறது.

கர்நாடகாவின் கடலோரப் பகுதியில் வாழும் குறிப்பிட்ட மக்கள் பெரும்பாலும் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களை வழிபடுகின்றனர். அவர்களை பொறுத்தவரை, அவை கடவுளின் பாதுகாவலர்களாக கருதப்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இதுபோன்று ஒரு ஆன்மா உள்ளது. அதை அவர்கள் 'பூதா' என்று அழைக்கிறார்கள்.

யூடியூபரான அன்னி அருண் என்பவர் இந்த விநோத திருமண சடங்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சடங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் நினைவாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அன்னி அருண் ட்வீட்டில்,  ‘நான் இன்று ஒரு திருமணத்தில் பங்கேற்றேன். அதனை ட்வீட் செய்யும் அளவிற்கு அதில் என்ன இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அந்த திருமணத்தில் மணமகன் இறந்துவிட்டார். அதேபோல, மணமகளும் இறந்துவிட்டார். இருவரும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். உயிரிழந்த இருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. கர்நாடகாவின் தக்ஷன கன்னடா பகுதியில் பின்பற்றப்படும் இந்தப் பாரம்பரியம் குறித்து அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.



‘பிறக்கும்போதே உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். மற்ற திருமணங்களில் நடைபெறுவது போல அனைத்து சடங்குகளும் நடக்கின்றன. இரண்டு குடும்பங்களும் மாறி மாறி இருவரது வீட்டுக்குச் சென்று நிச்சயதார்த்தம் செய்துகொள்கின்றனர். அதன்பிறகு, திருமண நடைமுறை உள்ளது. திருமண நிகழ்வில் தாலி கட்டிக் கொள்கின்றனர். இந்தத் திருமணம் எளிதாக நடைபெறுவது இல்லை’ என அந்த யூடியூபர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘சமீபத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வில் மணமகன் வீட்டார், மணப்பெண்ணை நிராகரித்துவிட்டனர். காரணம், மணப்பெண், மணமகனை விட ஒரு சில வயது மூத்தப் பெண் என்பதுதான். இந்த நிகழ்விற்கு நான் சற்று தாமதமாக சென்றதன் காரணமாக சடங்குகளை முழுமையாக காணமுடியவில்லை. மணமகன் சார்பாக, மணப்பெண்ணுக்கு புடவை வழங்கப்படுகிறது. மணப்பெண் புடவை உடுத்துவதற்கு அவர்கள் உரிய நேரமும் ஒதுக்குகின்றனர். அதன் பின்னர், மணமகனும், மணப்பெண்ணும் இருக்கையில் அமருவதற்கு முன்பாக 7 முறை இருக்கையைச் அங்கிருக்கும் சுற்றத்தார் சுற்றிவருகின்றனர். பின்னர், மணப்பெண்ணும், மணமகனும் அவர்களது இருக்கையில் அமர்கின்றனர். (மணப்பெண் ஆடையும், மணமகன் ஆடையும் இருக்கையில் வைக்கப்படுகிறது). குறிப்பாக சொல்லப்போனால், யாரும் இவற்றை ஆன்மாக்களுக்கு செய்வது போல சோகமாக இருப்பதில்லை. மற்ற திருமணங்களைப் போலவே ஜோக்கடித்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். சிறுவர்களும், திருமணம் ஆகாதவர்களும் இந்தச் சடங்குகளைப் பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. மேலும், மணமகனின் சட்டையின் கைப்பகுதியைக் கொண்டு மணமகளின் புடவையின் முந்தானையைப் பிடித்துக்கொள்கின்றனர். அர்ச்சனைத் தட்டிலிருந்து தாலி எடுக்கப்பட்டு மணமகளின் புடவை மீது வைக்கப்படுகிறது. தாலி கட்டும் முகூர்த்த நேரத்தில்தான் மணமக்களின் பெயர் என்ன என கேட்கப்பட்டு, மணமகனுக்கு சந்தப்பா எனவும் மணப்பெண்ணுக்கு சோபா எனவும் பெயர் சூட்டப்படுகிறது. தாலி கட்டு முடிந்ததும் இரு குடும்பத்தினரும் முன்வந்து வாழ்த்துகின்றனர். பின்னர், மணமகனையும், மணமகளையும் வெளியே கொண்டு வந்து கடவுளிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர். புதிதாக திருமணமான தம்பதி, மணமகன் வீட்டுக்குச் செல்கின்றனர். அவர்கள், ஆரத்தி எடுத்து வரவேற்கப்படுகின்றனர். மணமகளை, மணமகனின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கின்றனர். பிறகு, அனைவருக்கும் விருந்து உணவாக அசைவ உணவுகள் உள்ளிட்ட அறுசுவை விருந்து படைக்கப்பட்டு மகிழ்ச்சியுடன் இந்தச் சடங்குகளை முறையாக செய்கின்றனர்’ என்று ட்வீட்டில் அருண் கூறியுள்ளார்.
Published by:Archana R
First published:

Tags: India, Karnataka

அடுத்த செய்தி