ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆய்வுக்கு சென்ற மகளிர் ஆணைய தலைவரிடமே அத்துமீறிய கார் ஓட்டுநர்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

ஆய்வுக்கு சென்ற மகளிர் ஆணைய தலைவரிடமே அத்துமீறிய கார் ஓட்டுநர்.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

ஸ்வாதி மலிவால்

ஸ்வாதி மலிவால்

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவாலிடம் கார் ஓட்டுநர் ஒருவர் பலந்தமாக அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இத்தகைய சூழலில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவருக்கே இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மலிவால்.இவர் நேற்று நள்ளிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் அதிகாலை 3.11 மணி அளவில் ஸ்வாதி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2ஆவது கேட் நுழைவு வாயில் பகுதியில் நிற்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் ஒரு கார் வந்து ஸ்வாதியின் அருகே நின்றுள்ளது. அந்த காரின் ஒட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். காருக்குள் இருந்த அந்த நபர் ஸ்வாதியை பார்த்து காரில் வந்து ஏறி அருகே அமர்ந்து கொள் என வற்புறுத்தியுள்ளார். அதற்கு ஸ்வாதி மறுப்பு தெரிவித்த நிலையில், காரின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஸ்வாதியின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

அவரின் பிடியில் இருந்து தப்ப ஸ்வாதி முயற்சித்த போது காரை நகர்த்த தொடங்கியுள்ளார். ஜன்னல் வழியாக ஸ்வாதியின் கை சிக்கியிருந்த நிலையில், சுமார் 10 மீட்டர் தூரம் வரை அவர் தரதரவென இழுக்கப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அந்த கார் ஓட்டுநர் தப்பி சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தை ஸ்வாதி மலிவால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மகளிர் ஆணைய தலைவருக்கு டெல்லியில் பாதுகாப்பு இல்லை என கவலை தெரிவித்துள்ளார். ஸ்வாதி அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த ஓட்டுநரை சிசிடிவி ஆதாரங்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. அந்த நபரின் பெயர் ஹரிஷ் சந்திரா. அவருக்கு வயது 47.இவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.

First published:

Tags: Crime News, Delhi, Drunk, Woman