ஹோம் /நியூஸ் /இந்தியா /

சந்தை புழக்கத்தில் உள்ள போலி மருந்துகள் - எச்சரிக்கை விடுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்..!

சந்தை புழக்கத்தில் உள்ள போலி மருந்துகள் - எச்சரிக்கை விடுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்..!

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்

கால்சியம், வைட்டமின், வலி நிவாரணி மற்றும் அலர்ஜி போன்றவற்றின் போலி மாத்திரைகளைச் சந்தையில் புழக்கத்தில் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த மருந்துகளில் போலி மருந்துகள் குறித்த ஆய்வை மாநிலங்கள் அளவில் நடத்த இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது. அதன் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில் கால்சியம், வைட்டமின், வலி நிவாரணி மற்றும் அலர்ஜி போன்றவற்றுக்கு உபயோகப்படுத்தும் மருந்துகள் அதிக அளவில் போலி மாத்திரைகளாகச் சந்தையில் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் விடுத்த எச்சரிக்கையில் அலர்ஜிக்கு உபயோகப்படுத்தும் Montair மாத்திரை, இதய நோய் மாத்திரை Atorva, கொலஸ்ட்ரால் மாத்திரையான Rose day, வலி நிவாரணி Zerodol, கால்சியம் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் இடம்பெற்றுள்ளன.

இமாச்சல் மாநில மருந்து கட்டுப்பாடு ஆணையம் அளித்த புகாரின் பெயரில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் VG Somani, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கக் கூறியிருந்தார். மேலும் இமாச்சல் மாநிலத்தில் கண்டறிந்த மருந்துகளின் பட்டியலைக் குறிப்பிட்டு அந்தந்த மாநிலங்களில் கண்டறிய உத்தரவிட்டிருந்தார்.

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்தியாவில் தயாரித்த மருந்தால் அதிகளவு உயிர்கள் இறந்த நிலையில் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு விரைந்துள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மாநிலங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாடி மற்றும் ஆக்ரா நகரங்களில் சோதனையின் போது போலி மருந்துகள் கண்டறிந்த விவரங்களை இணைத்துள்ளனர்.

இமாச்சல் பிரதேச மாநிலத்தின் பாடி நகரில் மோஹித் பன்சால் என்பவருக்கு சொந்தமான  அங்கீகாரம் பெறாத மருந்து தயாரிப்பு கம்பெனியில் இருந்து போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அங்குத் தயாரிக்கப்பட்ட போலி மருந்துகள் ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி மருந்துகள் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள M/s MH Pharma என்ற மொத்த விலை கம்பெனி மூலம் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா, அலிகார் மற்றும் இக்லாஸ் நகரங்களில் நடத்திய விசாரணையில் மருந்து படலங்கள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டது. ஏற்கனவே கிலோ கணக்கில் போலி மருந்துகள் சந்தையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read : உ.பியில் கொரோனா நோயாளிக்கு கருப்பு பூஞ்சை தொற்று

மேலும் சோதனையில் முன் குறிப்பிட்ட மாத்திரைகள் தவிர Lactulose USP, Bio D3 plus, Diltiazem HCL, Dytor போன்ற மாத்திரைகளும் கிலோ கணக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகளை உண்மையாக முதன்மையான மருந்து தயாரிப்பு நிறுவனங்களான Cipla, Zydus Healthcare, IPCA Labs, Macleods Pharma மற்றும் Torrent Pharmaceuticals மேலும் சிலர் தயாரித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில் போலி மருந்துகள் புழக்கத்தில் உள்ளதை முதன்மையான  பணியாக எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுத்துச் சம்பந்தப்பட்டவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Tablets