Home /News /national /

Sputnik Light சிங்கிள் டோஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி - இனி ஒரு டோஸ் போதும்!!

Sputnik Light சிங்கிள் டோஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி - இனி ஒரு டோஸ் போதும்!!

கொரோனா  தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

Sputnik Light COVID vaccine : கடந்த ஜூன் ஆண்டு மாதமே இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பயன்பாட்டு அனுமதிக்கு Dr Reddy’s நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

ஸ்புட்னிக் லைட் கோவிட் தடுப்பூசிக்கு (Sputnik Light COVID vaccine) இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கி இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து இருக்கிறார். இது நாட்டில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் சிங்கிள்-டோஸ் கோவிட்-19 தடுப்பூசி ஆகும். கொரோனா மூன்றாம் அலை சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி அதாவது மூன்றாம் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து உள்ளது.

நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகள் 2 டோஸ் போடப்பட்டு வந்தன. தற்போது முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் சிங்கிள் டோஸ் மட்டுமே போட்டு கொள்ள கூடிய Sputnik Light COVID vaccine-க்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மருத்துவ ஆய்வுகள் மற்றும் பல நாடுகளில் உள்ள ரியல்-வேல்டு டேட்டாக்கள் Sputnik Light ஒரு முழுமையான அடிப்படையிலும் பூஸ்டராகவும் பயன்படுத்தப்படும் போது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி என்பதை நிரூபித்துள்ளன.

இந்த சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு வழங்கப்பட்டு உள்ள அவசரகால பயன்பாட்டு ஒப்புதல் கோவிட் -19 க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தொற்று நோய்க்கு எதிரான நாட்டின் கூட்டுப் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும்" என்று ட்வீட் செய்து உள்ளார். அதே போல நாட்டில் ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்ற 9-வது கோவிட் தடுப்பூசி இதுவாகும். ரஷ்யாவில் ஸ்புட்னிக் லைட்டின் 1 மற்றும் 2-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளின் தரவுகள் மற்றும் ரஷ்யாவில் அதன் 3-ஆம் கட்ட மருத்துவ பரிசோதனையின் தரவுகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO Central Drug Standards Control Organisation) வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது.

இதையும் படியுங்கள் : முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதித்த டீ விற்கும் இளைஞர்!

தகுதியான மக்கள் குழுக்களுக்கு இந்த தடுப்பூசி COVID-19 தொற்றுக்கு எதிரான ஊக்க மருந்தாக பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில், ஸ்புட்னிக் வி ஐதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி தயாரிப்பாளரான டாக்டர் ரெட்டிஸ் மூலம் இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. கடந்த ஜூன் ஆண்டு மாதமே இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பயன்பாட்டு அனுமதிக்கு Dr Reddy’s நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் ஒப்புதல் கிடைத்து உள்ளது. தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது இந்தியாவிற்கு ஸ்புட்னிக் வி வர தொடங்கியது. இந்த தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது.

இதையும் படியுங்கள் : போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து ஏற்படுகிறது.. முன்னாள் முதல்வரின் மனைவி கருத்து

மேலும் இது நாட்டிலேயே மிகக் குறைவாக நிர்வகிக்கப்படும் கோவிட் 19 தடுப்பூசி ஆகும். நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட செலுத்தப்பட்டுள்ள 169 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்களில், வெறும் 12 லட்சம் டோஸ்கள் மட்டுமே ஸ்புட்னிக் வி ஆகும். 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் Sputnik Light பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, பஹ்ரைன், அமீரகம், சான் மரினோ மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகள் ஏற்கனவே Sputnik Light தடுப்பூசியை உலகளாவிய பூஸ்டராக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Corona Vaccine, Covid-19, Covid-19 vaccine

அடுத்த செய்தி