• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டி! பா.ஜ.கவுடன் கூட்டணியை முறிக்கிறாரா நிதிஷ்குமார்?

சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டி! பா.ஜ.கவுடன் கூட்டணியை முறிக்கிறாரா நிதிஷ்குமார்?

நிதிஷ் குமார், மோடி

நிதிஷ் குமார், மோடி

பீகாருக்கு வெளியே தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக ஐக்கிய ஜனதா தளம் இல்லை. வரவுள்ள நான்கு மாநிலத் தேர்தலிகளில் எங்களுடைய கட்சி தனித்து போட்டியிடும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    நான்கு மாநிலங்களில் வரவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.கவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

    மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது. அந்தக் கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. மத்தியிலும் பா.ஜ.க வெற்றி பெற்றநிலையில், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், விரும்பிய துறை ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்படாத நிலையில், மத்திய அமைச்சரவையில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தது. இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி, ‘பீகாருக்கு வெளியே தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக ஐக்கிய ஜனதா தளம் இல்லை. வரவுள்ள நான்கு மாநிலத் தேர்தலிகளில் எங்களுடைய கட்சி தனித்து போட்டியிடும். எங்களுடைய கட்சியை தேசியக் கட்சியாக மாற்ற விரும்புகிறோம்.

    டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீரில் ஆகிய நான்கு மாநிலங்களில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். 2020-ம் ஆண்டுக்குள் எங்களுடைய கட்சியை தேசியக் கட்சியாக நிருபிப்போம்’ என்று தெரிவித்தார். இதன்மூலம், பா.ஜ.கவுடனான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கூட்டணி முடிவு பெறுகிறது. பீகாரில் பா.ஜ.க ஆதரவில்தான் நிதிஷ் குமார் ஆட்சி நடைபெறுகிறது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: