• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க கொலிஜியம் பரிந்துரை!

தமிழகத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்க கொலிஜியம் பரிந்துரை!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட நான்கு நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு, நீதிபதிகளைத் தேர்வு செய்யும் உச்சநீதிமன்றக் குழுவான கொலிஜீயம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இமாச்சல பிரதேசம், பஞ்சாப்-ஹரியானா, ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் ராம சுப்பிரமணியம், கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட், ஹரிஷிகேஷ் ராய் ஆகிய 4 பெயர்களை கொலிஜீயம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த 4 நீதிபதிகளும் நியமனம் செய்யப்பட்டால் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஐ எட்டும்.

உச்சநீதிமன்றத்தில் வெகு நாட்களாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு, பிரதமர் மோடிக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க... மின்சாரம், மருத்துவ வசதியின்றி தவிக்கும் மலைவாழ் கிராம மக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: