ஃபோனி புயலால் கடும் பாதிப்பு: வாழ்வாதாரத்துக்காக இடம்பெயரும் ஒடிசா மக்கள்!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரும் புயலாக உருவெடுத்த ஃபோனி புயல் ஒடிசா மாநிலத்தையே புரட்டிப்போட்டது.

(Photo Credit: PTI)
- News18
- Last Updated: May 18, 2019, 4:58 PM IST
ஃபோனி புயலுக்குப் பின் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மக்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஊரைவிட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரும் புயலாக உருவெடுத்த ஃபோனி புயல் ஒடிசா மாநிலத்தையே புரட்டிப்போட்டது. மக்கள் தங்களது வீடுகளை இழந்து இருக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, மீனவ சமுதாய மக்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஃபோனி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 6,389 நாட்டுப் படகுகள், 7,240 வலைகள், 587 ஹெக்டெர் பரப்பளவில் அமைந்திருந்த 2,524 மீன் வளர்ப்புக் குட்டைகள், மூன்று மீனவத் துறைமுகங்கள், ஆறு மீன் பிடி நிறுத்தங்கள், ஐந்து மீன் வயல்கள் சேதமடைந்துள்ளன. ஆனால், மீனவர்களுக்கு ஏற்பட்ட சேதாரம் எண்ணில் அடங்க முடியா அளவு மிகவும் மோசமான சேதாரம் என்கிறார் தேசிய மீனவர்கள் சங்கச் செயலாளர் டெபாஷிஷ் ஸ்யாமால். மேலும், 1,50,000 பாரம்பரிய மீனவர்கள் ஃபோனி புயலுக்குப் பின் வாழ்வாதாரத்துக்காக தவித்து வருவதாகவும் மீனவச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வாதாரத்துக்காக மீனவர்கள் பலரும் வேறு வேலைகள் தேடி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்கின்றனர். இது காலநிலை மாற்றத்துக்கான கொடுமையான தண்டனை என்று இயற்கை ஆர்வலர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் பார்க்க: கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்காக பா.ஜ.க வேட்பாளர் பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரும் புயலாக உருவெடுத்த ஃபோனி புயல் ஒடிசா மாநிலத்தையே புரட்டிப்போட்டது. மக்கள் தங்களது வீடுகளை இழந்து இருக்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, மீனவ சமுதாய மக்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஃபோனி புயல் மீனவர்களுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 6,389 நாட்டுப் படகுகள், 7,240 வலைகள், 587 ஹெக்டெர் பரப்பளவில் அமைந்திருந்த 2,524 மீன் வளர்ப்புக் குட்டைகள், மூன்று மீனவத் துறைமுகங்கள், ஆறு மீன் பிடி நிறுத்தங்கள், ஐந்து மீன் வயல்கள் சேதமடைந்துள்ளன.