ஊழலுக்கு எதிரானவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பாஜக அரசு, தமிழகத்தில் ஊழல் செய்துள்ள தனது கூட்டணி கட்சியான அதிமுக மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது. மக்களவையில் நடைபெறும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
தயாநிதிமாறன் பேசுகையில் “பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, 130 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால் அந்த வழக்கை சிபிஐ முடித்துக் கொண்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது, தமிழக வரலாற்றிலேயே இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது. முதலமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எதிராக ஊழல் வழக்குகள் என்று வரிசைகட்டி நிற்கின்றன. ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று காலகட்டத்தில் முகக் கவசம் வாங்கியதில் ஊழல் நடத்திய ஒரே அரசு தற்போதைய தமிழக அரசுதான். பாஜக அரசு இவற்றை எல்லாம் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? என்றார்.
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், மேற்படி எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கின்றது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4ஜி சேவை வழங்கிய மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்க மறுப்பது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.
மேலும் படிக்க... ‘நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை’: இந்தியில் பேசிய எம்.பி.களுக்கு கார்த்தி சிதம்பரம் தமிழில் பதிலடி
எல்ஐசி, ஏர் இந்தியா தனியார் மயத்தைக் கைவிட வேண்டும் என்றும் அப்போது தயாநிதி மாறன் கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corruption, Dayanidhi Maran, Parliament