’இன்னும் 24 மணி நேரம்...’- வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்மிர்தி இராணி

ஸ்மிருதி இராணி

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தாண்டும் பாஜக-வே வெல்லும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே வந்துள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் 24 மணி நேரமே இருக்கும் நிலையில், தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிடுகிறார் பாஜக-வின் ஸ்மிருதி இராணி. தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கும் தனது கட்சிக்கும் ஆதரவு அளிக்கும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

“இன்னும் 24 மணி நேரமே உள்ளது... நாளை நம்மில் பலரும் வாக்கு எண்ணிக்கையை நொடிக்கு நொடி அறிந்துகொள்ள டிவி முன்னர் அமர்ந்திருக்கும் சூழலில், எனக்கும் என் கட்சிக்கும் எண்ணிலடங்கா ஆதரவு அளித்த நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தாண்டும் பாஜக-வே வெல்லும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாகவே வந்துள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை கூட பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சார்ந்த முக்கியத் தலைவர்களுக்கு டெல்லியில் சிறப்பு விருந்து அளித்தனர்.

மேலும் பார்க்க: அமித்ஷாவின் விருந்து! ஓபிஎஸ், இபிஎஸ், பிரமேலதா விஜயகாந்த், அன்புமணி பங்கேற்பு
Published by:Rahini M
First published: