ஜம்மு காஷ்மீர் விமானப் படை தளத்தில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மேலும் இரண்டு ட்ரோன்கள் ராணுவ பகுதியில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு விமான நிலையத்துக்குள் இந்திய விமானப்படை தளம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில், ட்ரோன்கள் மூலம் அனுப்பப்பட்ட வெடிகுண்டு, விமானப்படை தளத்தின் தொழில்நுட்ப கட்டடத்தின் மேற்கூரையில் விழுந்து வெடித்தது. அடுத்த 5வது நிமிடத்தில் 2வது குண்டு தரையில் வெடித்தது. இந்த தாக்குதலில் விமானப்படை ஊழியர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
இந்தியாவில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும். பாகிஸ்தான் எல்லையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் விமானப்படை தளம் உள்ள நிலையில், சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தே ட்ரோன்கள் அனுப்பப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது எல்லை தாண்டிய தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டிரோன் மூலம் பயங்கர தாக்குதல்... ஜம்மு சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாதிகள்..
இந்நிலையில்தான் ராணுவப் பகுதியில் ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஜூன் 27-28 இடைப்பட்ட இரவின் போது, ரத்னுச்சக்-கலுச்சக் இராணுவப் பகுதியில் இரண்டு ட்ரோன்கள் பறப்பதை எச்சரிக்கை படையினர் பார்த்துள்ளனர். உடனடியாக, உயர் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டது மற்றும் ட்ரோன்களை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து ட்ரோன்கள் இரண்டும் பறந்தன. படையினரின் சமயோஜித செயலால் மிகப்பெரிய அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர் மற்றும் தேடல் நடவடிக்கை நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராணுவ பகுதிக்கு வெளியே உள்ள பகுதி முழுவதும் உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டு மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.