மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ருபானிக்கு கொரோனா பாசிட்டிவ்

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  விஜய் ரூபானி தற்போது நலமுடன் உள்ளார்; மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், விஜய் ரூபானிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என வந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  விஜய் ருபானிக்கு வயது 64.

  முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  உலகம் முழுவதிலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரத்து 296 ஆகும். இந்தியாவில், 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அதனால், கொரோனாவில் இருந்து மீண்வர்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

  இந்தியாவின் கொரோனா மீட்பு விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது. இது உலகின் மிகச் சிறந்த மீட்பு விகிதம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  நாடு முழுவதிலும் இதுவரை 82,63,858 பேருக்கு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 852 அமர்வுகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களில் 68.55 சதவீதத்தினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

  இந்நிலையில் கொரோனா மீட்பில் முன்னிலையில் இந்தியா இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் குஜராத் முதல்வருக்கே கொரொனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.

  ஞாயிறன்று பிரதமர் மோடி ருபானியின் ஆரோக்கியம் குறித்து தொலைபேசியில் விசாரித்தார். முழுதும் உடலை நன்றாக சோதனை செய்து கொண்டு  ஓய்வு எடுத்துக் கொண்டு திரும்புமாறு பிரதமர் மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: