பா.ஜ.கவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ: டெல்லி அரசியலில் பரபரப்பு!

பா.ஜ.கவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ

ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏக்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுத்து தங்களது கட்சிக்கு இழுப்பதற்கு பா.ஜ.க முயற்சிக்கிறது’ என்று டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிஸ்சோடியா குற்றம்சாட்டியிருந்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் இன்று பா.ஜ.கவில் இணைந்தார்.

  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது.
  இதுவரை நான்கு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. வாக்குப்பதிவுக்கு முன்னர் இருந்தே, பல மாநிலங்களில் பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏகள் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றன.

  இந்தநிலையில், இரு தினங்களுக்கு முன்னர், ‘ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏக்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுத்து தங்களது கட்சிக்கு இழுப்பதற்கு பா.ஜ.க முயற்சிக்கிறது’ என்று டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிஸ்சோடியா குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், இன்று காந்தி நகர் தொகுதியின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய் இன்று பா.ஜ.கவில் இணைந்தார்.

  டெல்லியின் பா.ஜ.க பொறுப்பாளர் ஷ்யாம் ஜாஜூ மற்றும் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இதுகுறித்து தெரிவித்த எம்.எல்.ஏ அனில் பாஜ்பாய், ‘கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.கவுக்காக உழைத்தேன். கட்சியின் விசித்திரமான நடவடிக்கையாலும், மரியாதை அளிக்காததாலும் நான் மிகவும் வேதனையடந்தேன். ஆம் ஆத்மி அதனுடைய பாதையிலிருந்து விலகிவிட்டது. நான் பா.ஜ.கவில் சேர்வதற்கு பணம் வாங்கவில்லை’ என்று தெரிவித்தார்.

  இதுகுறித்து தெரிவித்த மத்திய அமைச்சர் விஜய் கோயல், ‘ஏழு எம்.எல்.ஏக்கள் இல்லை. 14 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் அடைந்த ஏமாற்றம் மற்றும் அவமானத்தின் காரணமாக எங்கள் கட்சியில் இணையவுள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார். பா.ஜ.க குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  Also see:
  Published by:Karthick S
  First published: