20 வயது மகள் தனது வாட்ஸ்ஆப்பில் வைத்த ஸ்டேட்டஸால் அவரது தாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த ஸ்டேட்டஸ் வைக்கப்படும்போது, அது தனது தாயின் உயிரைப் பறிக்கும் என்று மகள் நினைத்திருக்க மாட்டார். இந்த கொலைச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் பல்கார் அருகே சிவாஜி நகரில் கடந்த 10-ம்தேதி நடந்துள்ளது.
20 வயது பெண்ணுக்கும் அவரது தோழிக்கும் இடையே ஏதோ ஒரு தகராறு நடந்திருக்கிறது. இந்நிலையில் அந்தப் பெண் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டசில் ஒரு தகவலை வைத்திருக்கிறார். இது தன்னைத்தான் குறிக்கிறது என்று அவரது தோழி நினைத்து, குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க -
காங்கிரஸ் கட்சியை ராகுலும், பிரியங்காவுமே தோற்கடித்து விடுவார்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
இதையடுத்து, தோழியின் உறவினர்கள், 20 வயது பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரது தாயார் லீலாவதி தேவி மற்றும் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த லீலாவதி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மறுநாளே அவரது உயிர் பிரிந்து விட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் லீலாவதியின் மகள் நடந்த விபரங்களை கூறியுள்ளார். அவர் பொதுவாகத்தான் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும், அதை அவரது தோழி தவறாக புரிந்து கொண்டு இந்த சம்பவத்தை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க -
காதலர் தினம் - போலீசார் கெடுபிடி.. காதலர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆதரவு
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தோழியின் தாயார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.