Home /News /national /

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்.. பழைய நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி!

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்.. பழைய நினைவுகளை ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி!

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

இளம் பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டரில் மிகமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இன்றைய காலத்தில் ஒரு காதல் தோற்றுப்போனால், இன்னொரு காதல் மலர்வதுண்டு. இந்த நடைமுறை நம் கலாச்சாரத்தில் எப்போதோ புகுந்துவிட்டது என்றாலும், நம் சமூகத்தில் இன்னும் சில கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு தான் வருகின்றன. அந்த வகையில் திருமணமான ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிது அல்ல. கணவனை இழந்த அல்லது பிரிந்த பல மனைவிமார்கள் தங்கள் குழந்தைகளுக்காகவும் முக்கியமாக சமூகம் என்ன சொல்லுமோ என்பதற்காகவும் மறுமணம் செய்து கொள்வதில்லை.

ஆனால் தற்போது, இந்த காணோட்டம் தாயின் மகன் மற்றும் மகள்களிடையே மாறி வருவதை நாம் கண்டு வருகிறோம். சமீபத்தில் கூட, ஒரு மகள் தனது தாய்க்காக வரன் தேடிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல, தற்போது ஒரு இளம் பெண் ஒருவர் தனது தாய்க்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வுகளை ட்விட்டரில் மிகமகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

 



 

@alphaw1fe என்ற ட்விட்டர் யூசர், சமீபத்தில் திருமணத்தின் சில ஸ்னாப்ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரது தாயார், மணமகள் ஆகவிருப்பதையும், மங்களகரமான நாளுக்காக தனது தாய்க்கு மெஹந்தி நிகழ்ச்சி நடந்து வருவதையும் பகிர்ந்திருந்தார். மேலும் அந்த பதிவில், " எனது அம்மா திருமணம் செய்து கொள்வதை என்னால் நம்ப முடியவில்லை" என்று உற்சாகமான அவர் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அவரது தாய் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதைக் காட்ட மற்றொரு சிறிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.



அவரின் அந்த ட்வீட் நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றதோடு, வாழ்த்துக்களும் குவிந்தது. மேலும் அவர், தன்னை பின்தொடர்பவர்களுக்கு மற்றொரு விஷயத்தையும் பகிர்ந்துள்ளார். அதாவது, "15 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயாருக்கு ஏற்பாடு செய்யப்பட இருந்த திருமணத்தை வேண்டாம் என்று சொல்லி விலகி விட்டதாக ஒரு நெட்டிசன் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ளார்.



ஏனெனில் நானும் எனது 16 வயது சகோதரனும் எங்கள் குடும்பத்தில் ஒரு ஆண் துணை வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இப்போது? எங்கள் வாழ்க்கையில் தந்தையாக ஒருவரை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

 



 

மகளின் அடுத்தடுத்த பதிவு மிகவும் பிரபலமானதால், அவர் தனது தாயின் மோதிரம் மாற்று விழாவின் மகிழ்ச்சியான தருணங்களின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் மணமகனும், மணமகளும் விரைவில் மணமுடிக்க போவதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது தாய்க்காக வாங்கிய மோதிரத்தையும் அவர் தனியாக பகிர்ந்திருந்தார். இந்த டிவீட்களை நான் என் எதிர்காலத்தில் பார்க்கும் போது இன்னும் சந்தோஷமடைவேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Marriage, Wedding plans

அடுத்த செய்தி